அதிமுக தலைவரை முதல்வராக்க சொன்னது திமுகதான்: எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? சொல்ல வேண்டி வரும் அமைச்சர் ஷாஜகான்

எங்கள் இரண்டு உறுப்பினர்களை மே 8-ம் தேதி இரவு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்கு காவல் போட்டது யார்?
It was the DMK that proposed making the AIADMK leader the Chief Minister; —Minister Shahjahan.
It was the DMK that proposed making the AIADMK leader the Chief Minister; —Minister Shahjahan.source: google
1 min read

சட்டப்பேரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மீதான குதிரை பேர புகார்கள் தொடர்பான விவாதத்தின் போது, எல்.எல்.ஏ சையது பாரூக் பாஷா மற்றும் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பேசியது கவனம் பெற்று வருகிறது.

எம்.எல்.ஏ சையது பாரூக் பாஷா விளக்கம்

எல்.எல்.ஏ சையது பாரூக் பாஷா, "திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் நான் தவறாக எதுவும் பேசவில்லை; எங்கள் தலைவர் கூறியதையே பொதுக்குழுவில் எதிரொலித்தேன்" என்று கூறினார்.

மேலும், "திமுக - அதிமுக இணைந்து அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால், அந்த கொள்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, கொள்கைக் கூட்டணி வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்போம் என்று எங்கள் தலைவர் தெரிவித்தார். நாங்கள் எந்த கோடிக்கும் சோரம் போக மாட்டோம்" என்றும் அவர் விளக்கமளித்தார்.

அமைச்சர் ஷாஜகானின் பதிலடி

இதனைத் தொடர்ந்து எழுந்து பேசிய அமைச்சர் ஷாஜகான், "சோஃபா மாடல் அரசு, முஸ்லீம் லீக் பணம் வாங்கியது, குதிரை பேரம் என்றெல்லாம் பேசுவதை ஏற்க முடியாது. ஐயுஎம்எல் எம்.எல்.ஏ சையது பாரூக் பாஷா அதிமுகவினரைப் பற்றிப் பேசவில்லை.

கடந்த மே 7-ஆம் தேதி ஐயுஎம்எல் கட்சியைத் தொடர்புகொண்டு அதிமுக தலைவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறியதே திமுகதான். அந்த முடிவை எடுத்தது திமுகவே ஆகும்.

ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்?

ஆனால் மே 8-ஆம் தேதி அவர்கள் வேறு ஒரு முடிவை எடுத்தனர். அதனை ஐயுஎம்எல் ஏற்க மறுத்த காரணத்தால், எங்கள் இரண்டு உறுப்பினர்களை மே 8-ம் தேதி இரவு ஹோட்டலில் அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்?

எங்களுக்கு காவல் போட்டது யார்? என்பதையெல்லாம் உடைத்துப் பேச வேண்டிய சூழல் வரும்" என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.

மேலும், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தினாலேயே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்றும் அமைச்சர் ஷாஜகான் பேரவையில் தெரிவித்தார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in