Jana Nayagan: SC-யை நாடிய ஜனநாயகன் படக்குழு: பொங்கலுக்குள் ரிலீஸ்!

Jana Nayagan Movie Censor Certificate Issue Case in Supreme Court : சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, ஜனநாயகன் படக்குழு உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறது.
Jana Nayagan Censor Issue Following the order issued by Madras High Court bench, Jananayagan film crew approached Supreme Court
Jana Nayagan Censor Issue Following the order issued by Madras High Court bench, Jananayagan film crew approached Supreme Court
1 min read

நீதிமன்றத்தில் ‘ ஜனநாயகன் ‘

Jana Nayagan Movie Censor Certificate Issue Case in Supreme Court : விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் 9ம் தேதி ரிலீசாக இருந்தது. தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படக்குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.

U/A சான்றிதழ் - தனி நீதிபதி உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.

சென்சார் போர்டு மேல்முறையீடு

ஆனால் நீதிபதி பிடி ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மனுவில் கோரப்படாத நிவாரணத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு தனி நீதிபதி அளித்துள்ளார் என தணிக்கை வாரியம் தரப்பு வாதம் வைத்தது.

மேலும், சென்சார் போர்டு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது.

நீதிபதி அமர்வு சரமாரி கேள்வி

இதையடுத்து, தலைமை நீதிபதி, சரமாரியாக கேள்வி எழுப்பினார். குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தை ஏன் அவசரப்படுத்துகிறீர்கள்?

படக்குழு காத்திருந்தால் என்ன பிரச்சனை? சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன்?

நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என தலைமை நீதிபதி அமர்வு, ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்புக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.

தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

இதையடுத்து, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து உத்தரவிட்து.

மேலும், ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பட தயாரிப்பு நிறுவனமான KVN ப்ரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மனுவை திங்கட்கிழமை அன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்பட்டால், பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாக வாய்ப்பு உள்ளது.

==========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in