

எழும்பூர் பராமரிப்பு பணி
Chennai Egmore Railway Station Redevelopment : சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ரு வருகிறது. இதனால் மின்சார ரயில் சேவைகள் தற்போது குறைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்புகளையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.
மார்ச்-ல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை
அதன்படி பயணிகளின் வசதிக்காக முதலில் மார்ச் 10 ஆம் தேதி முதல் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை ரயில் இயக்கப்படும் என்று ரயில் கூடுதல் சேவைகளை அறிவித்துள்ளது.
40 சிறப்பு பேருந்துகள்
ரயில் சேவை மட்டுமின்றி தற்போது தாம்பரம்- கடற்கரை இடையே கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவதாகவும் அறிவித்துள்ளது.
பயணிகளின் சிரமத்தைக் குறைக்க
இந்த 40 பேருந்துகளும் கிண்டி, தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய வகையில் , பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் முதல் கடற்கரை வரை
குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணி முதல் 8.43 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.
கடற்கரை முதல் தாம்பரம் வரை
அதேபோல் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - கடற்கரை, கடற்கரை - தாம்பரம் வழியாக 20 பேருந்து சேவைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைக்கு சென்று வீடு திரும்புவோர் பயன்பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ரயில் மாதாந்திர பாஸ்
ரயில் மாதாந்திர பாஸ் எடுத்தவர்கள் நஷ்டமையாமல் இருக்கும் விதமாக மேலும் கூடுதல் அறிவிப்பையும் ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ரயில் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள் தற்போது கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
டிக்கெட் எடுக்க வேண்டாம்-ரயில் பாஸ் போதும்
உங்கள் ரயில் பாஸ் காண்பித்தாலே போதுமானது என்று தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளணர்.
SOUTHERN RAILWAY CHARTERED BUS
கூடுதல் சிறப்பு பேருந்துகளை கண்டறியும் விதமாக , அவ்விதமான பேருந்துகளில் SOUTHERN RAILWAY CHARTERED BUS என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த பேருந்துகளில் நீங்கள் பயணம் செய்யும் போது டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.