

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
தொடர் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், கூடுதலாக நீரை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கபினியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநீர் இன்று தமிழக எல்லையை வந்தடையும்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் கனமழை பெய்து அணைகள் வேகமாக நிரம்பி வருவது, விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
====