தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! முழு விவரங்களுடன்...!

தவெக எம்.எல்.ஏ மீதான வழக்கு குறித்த விரிவான செய்தி!
Kallakurichi TVK MLA Arul Vignesh Case Madras High Court Order
Kallakurichi TVK MLA Arul Vignesh Case Madras High Court Ordersource: google
2 min read

Kallakurichi TVK MLA Arul Vignesh Case Madras High Court Order

5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த எழுத்துப்பூர்வ புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்போனைப் பறிமுதல் செய்ய முடிவு

தவெக எம்.எல்.ஏ தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் எழுந்த புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாவட்ட ஆட்சியர் நேரில் அளித்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள்

இதைத் தொடர்ந்து பெண்ணைப் பாலியல் ரீதியாக அணுகுதல், பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல் மற்றும் ஆபாச செய்கை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 75, 78, 79 உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் வரை சிறை மற்றும்

இந்தப் பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அருள் விக்னேஷுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பறிமுதல் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வின் செல்போன்

இதனிடையே, எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டிற்கு நேரில் சென்ற காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன், அவரது செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பரபரப்பு விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு, நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

நேற்று (நவம்பர் 23) நடைபெற்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவரிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று (நவம்பர் 24) நடைபெற்ற விசாரணையில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரைத் தொடர்ந்து எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி வி. லட்சுமிநாராயணன் எழுப்பிய முக்கியக் கேள்விகளும் உத்தரவுகளும்:

நீதிபதியின் கேள்வி: "கடந்த ஜூலையிலேயே ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்; இதுவரை நடந்த விசாரணை என்ன?

யாரையாவது காப்பாற்றுவது தெரிந்தால்?

யாரையாவது காப்பாற்றுவது தெரிந்தால் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும்" என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை எனக் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐஜி அந்தஸ்து அதிகாரி விசாரணை

குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் அரசியல் சாசன உயர் பதவியை வகித்து வருவதால், இந்த வழக்கின் விசாரணையை ஐஜி அந்தஸ்து அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும். வரும் டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடு

மேலும், இந்த வழக்கின் விசாரணை குறித்த விவரங்களை செய்தி ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனத் தடை விதித்த நீதிபதி, சமூக ஊடகங்களில் இது தொடர்பான பதிவுகள் உடனடியாக நீக்கப்படுவதை சைபர் கிரைம் போலீசார் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கு தொடர்பான எந்தத் தகவல்களையும் வெளியிடக் கூடாது என்றும் மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எச்சரித்தார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை நவ.17 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

======================