கரூர் வழக்கு : விஜய் நாளை ஆஜராக மீண்டும் சம்மன்! : சிபிஐ உத்தரவு

CBI Investigate TVK Vijay on Karur stampede case Update in Tamil : கரூர் நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Karur case, Vijay summoned again to appear tomorrow!
Karur case, Vijay summoned again to appear tomorrow!source:google
1 min read

CBI Investigate TVK Vijay on Karur stampede case Update in Tamil :

விஜய் மீதான கரூர் வழக்கு விசாரணை

கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏர்படுத்தி இருந்தது.

41 உயிரிழந்த கோர சம்பவம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

6 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை

சி,பி,ஐ விசாரணையின் படி ஏற்கெனவே விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு அதன்படி டெல்லியில் உள்ள சி,பி,ஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள்

சி,பி,ஐ விசாரணையின் போது, விஜயிடம் அறிவித்த நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்தது ஏன்? பாதுக்காப்பு ஏற்பாடுகளில் உள்ள தவறு யாருடையது? போன்ற முக்கியமான கேள்விகளை எழுப்பியது.

இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய்யிடம் விசாரிப்பதற்கு நாளை ஆஜராகுமாறு சி,பி,ஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது.

நாளை மீண்டும் ஆஜராகும் விஜய்

கரூரில் ஏற்கனவே பலகட்ட விசாரணை நடத்தி இருக்கும் சிபிஐ அதிகாரிகள், ஜனவரி 12 மற்றும் 19ம் தேதிகளில் விஜயை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், 3வது முறையாக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் நாளை ஆஜராக வேண்டி இருக்கும்.

விவாகரத்து வழக்கு, சி,பி,ஐ விசாரணை

சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஒருபக்கம் விஜய் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், நிர்வாகிகள் கூட்டம் என அரசியலில் முழுநேரமாக பயணிக்கிறார்.

ஏப்ரல் 20-ல் விவாகரத்து வழக்கு

ஆனால் மறுபக்கம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரும் சங்கீதாவின் அடுத்தடுத்த மனுக்கள், ஏப்ரல் 20 ஆம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணை,

விஜய், த்ரிஷா கலந்துகொண்ட வரவேற்பு நிகழ்ச்சி

நடிகை த்ரிஷாவுடன் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது,

ஜனநாயகன் சிக்கல்

ஜனநாயகன் படத்திற்கு தணிக்க சான்று பெறுவதில் தாமதம் என விஜய்க்கு அடுத்தடுத்த சிக்கல் எழுந்த நிலையில், இப்போது நாளை நேரில் ஆஜராகும்படி சி,பி, ஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in