

வடகிழக்கு பருவமழை தீவிரம்
Koyambedu Vegetable Market Price Today Update in Tamil : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழை, வட மாவட்டங்களிலும் பரலாக பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று புயலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
காய்கறி விலைகள் அதிகரிப்பு
இதன் காரணமாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்ததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான காய்கறி விலைகள் கணிசமாக அதிகரித்து இருப்பதால், இல்லத்தரசிக, எதை வாங்குவது, எதை விடுவது என முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
உச்சத்தில் தக்காளி விலை
மொத்த விற்பனையில் தக்காளி விலை 1 கிலோ 70 ரூபாய்(Tomato Price Today in Chennai) வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லரை விலையில், கிட்டத்தட்ட ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழை குறையும் வரை தக்காளி விலை சரிய வாய்ப்பே இல்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெங்காயம் விலையும் உயர்வு
கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையும் கனிசமாக உயர்ந்து வருகிறது கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 30 முதல் 40 ரூபாய்க்கு(Onion Price Today in Chennai) விற்பனையானது. தற்போது இதன் வரத்தும் சரிவைடந்துள்ளதால் ஒரு கிலோ 50 ரூபாயை தாண்டியுள்ளது. அதேபோல, சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
காய்கறிகள் விலையேற்றம்
பீட்ரூட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ குடை மிளகாய் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாகற்காய் 55 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நாட்டு காய்கறிகள் விலையும் அதிகரிப்பு
நாட்டு காய்கறிகள் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளது. கொத்தவரை ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 76 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 560 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
உச்சத்தில் முருங்கை விலை
கடந்த மாதம் வரை மலிவான விலையில் கிடைத்த முருகைக்காய், இப்போது, பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 1 கிலோ முருங்கைகாய் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், முருங்கைக்காய் சாம்பார் என்பது நடுத்தர மக்களின் கனவாகி விட்டது.
மழையின் தீவிரம் குறைந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தொடர் மழை காரணமாக பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
========================