திமுக கூட்டணி மகிழ்ச்சியாக இல்லை : ராஜேந்திர பாலாஜி கணிப்பு

திமுக கூட்டணியில் எந்தக் கட்சியும் மகிழ்ச்சியாக இல்லை என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.
திமுக கூட்டணி மகிழ்ச்சியாக இல்லை : ராஜேந்திர பாலாஜி கணிப்பு
https://x.com/RajBhalajioffl
1 min read

2026 சட்டமன்ற தேர்தல், முதல்வர் வேட்பாளர்கள், கூட்டணி ஆட்சி பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து, விவாதப் பொருளாகி இருக்கிறது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்றார். இதுகூட்டணி எடுத்த முடிவு. எனவே, அவர் கூறுவதுதான் இறுதி முடிவாக இருக்க முடியும். கூட்டணி, இடப்பங்கீடு பற்றி எடப்பாடிதான் முடிவு செய்வார்.

அமித் ஷா எந்தச் சூழலில் இவ்வாறு கருத்து கூறினார் எனத் தெரியவில்லை. அதிமுக சேர்ந்த முதல்வர் என்றால், அது எடப்பாடி ஆட்சிதான். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே, அதிமுகவின் விருப்பம். அந்த முடிவோடுதான் எடப்பாடியார் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். எனவே, கூட்டணிக்கு விஜய் வர மாட்டார் என்று சொல்ல முடியாது.

திமுக கூட்டணி வருத்தத்தில் உள்ளது. யாரும் மகிழ்ச்சியாக இல்லை. தேர்தல் அறிவித்த பிறகும் கூட்டணிகள் மாறிய வரலாறு உண்டு. அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுகவின் சூழ்ச்சி பலிக்காது, இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in