
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான அவர், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு :
“தமிழகத்தில் லாக்அப் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. பொதுமக்களுக்கு காவல்துறையினர் தரும் தொந்தரவுகள் குறித்து, முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரதட்சணை கொடுமையால் தமிழகத்தில் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் தவறுதான்.
அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்க :
எனவே, லாக்அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்
சினிமா துறையில் மட்டும்தான் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகக் கூறமுடியாது. பள்ளி, கல்லூரி உள்பட எல்லா இடத்திலும் போதைப்பொருள் நடமாட்டம் இருக்கிறது.
திரைத் துறையில் 2 பேர் சம்பந்தப்பட்டு இருப்பதால், உடனே திரைத்துறையில் போதைப்பொருள் அதிகமாகி விட்டது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
போதைப்பொருள் பாதிப்புகள் :
இதை தடுப்பதற்கான வழிகளை ஆராயாமல், பூதக்கண்ணாடி வைத்து, பெரிதாக்கக் கூடாது. ஊசி மூலம் போதை உட்கொள்ளும் நிலையும் இருக்கிறது. போதைக்கு அடிமையானவரை எப்படி மீட்பது? என்ற வழியைப் பார்க்க வேண்டும்.
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் திமுக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு குஷ்பு கேட்டுக் கொண்டார்.
======