மறைந்த கவிஞர் புவியரசு : இருமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் : அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு...

மறைந்த கவிஞர் புவியரசு தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சிக்காரன் என்ற கவிதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.
Late poet Puviyarasu: Two-time Sahitya Akademi Award winner; funeral with state honors.
Late poet Puviyarasu: Two-time Sahitya Akademi Award winner; funeral with state honors. google
2 min read

யார் இந்த கவிஞர் புவியரசு

கோவையை பூர்வீகமாக கொண்ட கவிஞர் புவியரசு உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்.

இவரது இயற்பெயர் சு. ஜெகநாதன். ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையை தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக புவியரசு என்று மாற்றிக்கொண்டுள்ளார்

கல்வி வாழ்க்கை

இவரின் பெற்றோர் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து கோயம்புத்தூரில் வசித்தனர். இவர் இடைநிலைப் பட்டத்தைக் கோவை  அரசுக் கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர்

தமிழ்நாட்டின் தமிழ்மொழியைத் ஆட்சிமொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும் எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறை சென்றவர். இவரது படைப்புகள் 1952-இலிருந்து வெளிவரத் தொடங்கின.

இவர் அரசியல்ரீதியாக ஒரு மார்க்சிசவாதி வாழ்ந்து வந்தவர் புவியரசு

இருமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்

2007 ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சிக்காரன் என்ற கவிதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளார் .இக்கவிதை காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

மேலும் இரண்டாவது ,ர கவிதைத் தொகுப்பான கையொப்பம் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.

இவரின் பெயரில் இயங்கிய அறக்கட்டளை

புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்பட்ட அறக்கட்டளை ,தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக இன்று வரை செயல் பட்டு வருகிறது .

80க்கும் மேற்ப்பட்ட இலக்கிய படைப்பு ,தமிழில் மொழிபெயர்ப்பு

கவிஞர் புவியரசு தனது இலக்கியப் பயணத்தில் 80-இற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். ஷேக்ஸ்பியர், கலீல் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளை கவிஞர் புவியரசு தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஓஷோவால் பாராட்டப்பட்ட ''தி புக் ஆஃப் மிர்தாத்–மிகய்ல் நய்மா'' என்ற நூல் ''மிர்தாத்தின் புத்தகம்'' என்று தமிழில் இவரால் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

இவரது கவிதை புரட்சிக்காரன் 2007-இல் மொழிப்பெயர்ப்புக்கான  சாகித்திய அகாதமி விருது பெற்றது. இக்கவிதை காஜி நஸ்ரும் இஸ்ஸாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்

தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூல்

மனிதன் மூன்றாம் பிறை இவர் எழுதிய முக்கூடல் எனும் நூல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூலாக , இவரது புதுகவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

மறைந்த கவிஞர் புவியர்சி உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 21 குண்டுகள் முழங்க அவருக்கும் முழு அர்சு மரியாதையானது வழங்கப்பட்டது

முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது

சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான திரு. புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு அவர்கள்.

‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத் துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படுm தெரிவித்திருந்த்தார்

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in