

நடிகர் ரஜினிகாந்த்
கருணாநிதி, ஜெயலலிதா இருந்த போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்ப்பட்டது. அவரது பேச்சுக்கள் தமிழக அரசியலை சில சமயம் புரட்டி போட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
அரசியலை கைகழுவிய ரஜினி
ஆனா, கொரானாவுக்கு பிறகு தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அறிவித்தாரு. பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் கட்சி தொடங்கி விடுவார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
ஆட்சியை பிடித்த தவெக
இந்தநிலையில், 2026 சட்டமன்ற தேர்தல், தமிழக அரசியலை புரட்டி போட்டிருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்னால் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், இப்போ ஆட்சியை பிடிச்சு முதல்வராகி இருக்கிறார். தமிழ்நாடு என்றால், அது திராவிட அரசியல் தான் என்ற அரசியல் கணக்கு தவிடுபோடியாகி விட்டது.
மக்கள் செல்வாக்கு முக்கியம்
கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பதாக, திமுக, அதிமுக மார் தட்டிக் கொண்டாலும், மக்கள் ஆதரவு இருந்தால், யாரும் ஆட்சியை பிடிக்கலாம், முதல்வராகலாம் என்று தமிழக மக்கள் பாடம் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.
அண்ணாமலையின் ’அரசியல் இயக்கம்’
அதன் தொடர்ச்சியாக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிதாக அரசியல் இயக்கம் தொடங்கி இருக்கிறார். வரும் பொதுத்தேர்தலில் தனது இயக்கம் அரசியல் கட்சியாக மாறி மக்களை சந்திக்கும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.
லதா ரஜினியின் ’மக்கள் மேடை’
இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் மக்கள் மேடை என்ற பெயரில் சமூக இயக்கம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
மக்கள் சேவையே முக்கியம்
இதுகுறித்து லதா ரஜினிகாந்த் பேசிய வீடியோவில், ‘‘சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற எங்கள் இயக்கத்தில் சேரலாம். பெரும் மக்கள் சேவையாக மக்கள் சக்தியாக உருவாகி இந்த சமூகத்திற்கு பல நன்மைகளை செய்ய முன்வர வேண்டும்.
தலைவர்களை உருவாக்குவோம்
மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் உங்களின் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.
இணைய தளம் தொடக்கம்
‘மக்கள் மேடை - இது மக்களின் இயக்கம்’ என்ற முழக்கத்துடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம் என்ற நோக்கத்துடன் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணைய விரும்புவோருக்காக 7550080515 என்ற மொபைல் எண்ணும் makkalmedaitn12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
================