இயக்கம் தொடங்கிய லதா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த மக்கள் மேடை இயக்கம் என்ற அமைப்பை தொடங்குவதாக அறிவித்திருந்தார் , மேலும் அவர் இந்த இயக்கம் குறித்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டு தெரிவித்திருந்தார் ,
வீடியோ பதிவில் அவர் தெரிவித்திருந்தாவது
நான ‘மக்கள் மேடை என்ற தொடங்கியுள்ளேன் ,இந்த இயக்கத்தில் , மாநிலத்துக்காக வேலை செய்ய நினைக்கும் அத்தனை பேரும் ஒன்றாக சேரலாம். ஒன்றாக சேர்ந்து, எங்களை தொடர்பு கொண்டு, மக்களுக்கும் நாட்டுக்கும் ஒரு பெரும் மாற்று சக்தியாக இருக்கும் அனைவரும் வாருங்கள் என்று தெரிவித்திருத்திருந்தார்
மக்கள் மேடை இயக்கம் ஏன் தேவை , லதா விளக்கம்
மக்கள் மேடை இயக்கம் ஏன் தொடங்கினோம் என்பதற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் லதா ரஜினிகாந்த் , இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளது படி
மக்கள் மேடை என்பது நாட்டில் உள்ள அனைவரும் தன்னுடைய நாடு, தன் மாநிலம் மற்றும் தான் வாழும் நிலப்பரப்பை காடும் அன்பின் மீதான அனைத்தையும் இது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது
இது பல வகையான கலாச்சாரமாம மரபு நடவடிக்கைகளை கொண்டுள்ளது , இதில் நாம் அனைவரும் தனிமையில் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் , நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்து வந்தது நம்முடைய கலாச்சாரம் என்றும்
இந்த தொழில்நுட்பமும் நவீனமயமாக்கலும், சில வழிகளில், நம்மை இயற்கையிலிருந்து வேறுபடுத்தியுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுகள் என்று இருக்கின்றன
நமது விவசாயிகள், குடிசைத் தொழில்கள் செய்பவர்கள், கைவினைஞர்கள், வணிகர்கள் ஆகிய அனைவருக்கும், இன்று இருக்கும் வாழ்க்கை சூழல் முறையை விட இன்னும் உயர்ந்த நிலை ஒன்று தேவைப்படுகிறது
அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்கிறோம்
இவை அனைத்தும் மேற்கத்திய கொள்கைகளால் அது முற்றிலும் நசுக்கப்பட்டு வருகிறது , இந்த நிலையில் அடுத்த தலைமுறைக்கு நாம் எத்தகைய மரபை விட்டுச் செல்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
நம்முடைய சந்ததியினருக்கும் நாம் எதை விட்டு செல்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் லதா அவர்கள்
இதைதான இந்த நோக்கத்தை தான் மக்கள் மேடை என்பது குறிக்கிறது. என் மாநிலத்துக்கு நான் எப்படி சேவை செய்ய முடியும்? என் நாட்டிற்கு நான் எப்படிச் சேவை செய்ய முடியும்? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதே அதன் நோக்கம்.
பொது நன்மைக்காக நமது திறமைகள், ஆற்றல், அறிவு மற்றும் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதே மக்கள் மேடை என்று தான் இயக்கம் தொடங்கியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்
ஆலோசனை வழங்கும் இயக்கமாக இருக்கும்
மேலும் தற்கொலைத் தடுப்பு, மாணவர்களுக்காக ஆலோசனை வழங்குவது போன்ற முக்கியத் திட்டங்களையும் மக்கள் மேடை இயக்கம் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்
========================