பள்ளிகளில் சட்டப் பாடம் : வழக்கறிஞர் சுமதி வலியுறுத்தல்

மாணவ, மாணவிகள் சட்டம் குறித்து தெரிந்து கொள்ள சமூக அறிவியல் போன்று, சட்டத்தை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுமதி யோசனை தெரிவித்து இருக்கிறார்.
Advocate Sumathi Suggest Law Subject in Schools
Advocate Sumathi Suggest Law Subject in Schools
1 min read

ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை :

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்த கவின்குமார் மனைவி ரிதன்யா. மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் நடந்த நிலையில், ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்தார்.

இறப்பதற்கு முன்பு ரிதன்யா, கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டி தனது தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ பதிவு, தமிழகத்தையே உலுக்கியது.

ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கி பதிவு செய்யப்பட்டது.

ரிதன்யாவின் மாமியார் கைது :

இதில் கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியும் இன்று கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் பற்றி, தமிழ் அலை யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் சுமதி, பள்ளிகளில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் சட்டத்தை ஒரு பாடமாக வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

பள்ளிகளில் சட்டப் பாடம் :

இவ்வாறு செய்வதால், மாணவர்களுக்கு சட்டம் பற்றிய அடிப்படை அறிவு, பள்ளிகளில் கிடைக்கும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்பெறும் என்று அவர் யோசனை கூறினார்.

வழக்கறிஞர் சுமதியின் இந்த கருத்திற்கு பார்வையாளர்கள் பெரும் வரவேற்பினை தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனை சிறப்பான ஒன்று என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தமிழக அரசும் பள்ளிகளில் சட்டப் பாடத்தை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வழக்கறிஞர் சுமதி பேட்டியின் முழுமையான வீடியோவை காண்க :

"Disclaimer: This content is for informational purposes only and is not intended to promote or glorify self-harm or suicidal behavior. If you're struggling with mental health issues or suicidal thoughts, please seek help from a qualified professional or a crisis hotline. Your life is valuable, and there is support available."

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in