சட்டப்பேரவை : திமுக vs தவெக காரசாரம் : "தேர்தல் வாக்குறுதி, குற்றங்களுக்கு எதிராக" முதல்வர் எப்போது பேசுவார்..?

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பிய நிலையில் திமுக, தவெக இடையே விவாதம் நடைபெற்றது.
Legislative Assembly session; debate between DMK and TVK
Legislative Assembly session; debate between DMK and TVKgoogle
1 min read

ஆளுநர் உரையின் மீதான விவரம்

தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரானது ஆளுநர் உரையுடன் தொடங்கியது , இந்த உரையில் தமிழத்தாய் வாழ்த்திற்க்கு முதலிடமானது அளிக்கப்பட்ட

நிலையில் அந்த உரையின் மீதான விவரம் இன்று சட்டப்பேரவையில் தொடங்கியது , இந்த நிலையில் அக்கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்

மேகேதாட்டு அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

இன்றைய கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம் முதல்வர் விஜய் முன்னிலையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேறியது

தவெக திமுக இடையே விவாதம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 'என்ன நடந்தாலும் நான் வாய் திறக்கமாட்டேன் என சரித்திர புரட்சியை ஏற்படுத்தி வருபவர் முதல்வர் விஜய்' என்று எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசினார்.

இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், "எங்கள் முதல்வர், கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது என அனைவருக்கும் தெரியும்.

சமயம் வரும்போது முதல்வர் பேசுவார்

என்ன பேச வேண்டும் எப்போது பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.முதல்வரை கொச்சைப்படுத்தும் விதமாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பேசி வருகிறார்" என்றார்.

ஆனால், உள்துறையை நிர்வகிக்கும் முதல்வர் விஜய், எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்று கூறிய நிலையில் திமுக , தவெக இடையே கடும் விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் வாக்குறுதி அரசிடம் கேள்வி

மகளிருக்கான இலவச பேருந்து , மகளிர் உதவிதொகை மற்றும் விவசாயிகளுக்கான பயிர் கடன் போன்றவை என்ன ஆனது என்று ஆஸ்டின் கேள்வியை எழுப்பினார்

ஆனால் முதல்வரோ, துறை சார்ந்த அமைச்சர்களோ இதுபற்றி எதுவும் பதிலளிக்கவில்லை. மாறாக, அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா இந்த கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

விவாதத்தை திசை திருப்ப வேண்டாம் என சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா

தற்போது ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேரவை உறுப்பினர்கள் பேச வேண்டும். விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

ஆஸ்டினை பேச அனுமதிக்காததால் தவெக திமுக எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

=============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in