'John Doe' order or Ashok Kumar order)” : அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் பிறப்பிச்ச 'John Doe' உத்தரவுன்னா என்ன, எந்த சமயத்துல அது எப்போ பிறப்பிக்கப்படும் அப்படின்னு பார்க்கலாம்.
Let’s look what 'John Doe' order issued by judges of Madurai Bench of the High Court in Thiruparankundram matter
Let’s look what 'John Doe' order issued by judges of Madurai Bench of the High Court in Thiruparankundram mattersource:thamizhalai,ai generated
2 min read

திருப்பரங்குன்றத்தில் தடை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிச்சது. தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில, திருப்பரங்குன்றத்தில 144 தடை உத்தரவு மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பிச்சாரு. போலீசார் குவிக்கப்பட்டாங்க.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணை

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட அவசர வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வு விசாரிச்சது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது அதிகாரிகளின் கடமை என்ற நீதிபதிகள், பக்தர்களின் அடிப்படை உரிமைக்கு 144 தடை உத்தரவு குறுக்கே நிற்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிச்சாங்க.

'ஜான் டோ' தடை உத்தரவு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுமாறு பொதுமக்கள் யாரும் அழைப்பு விடுக்கக் கூடாது எனக் கூறி, 'ஜான் டோ' (John Doe) என்ற தடை உத்தரவையும் நீதிபதிகள் பிறப்பிச்சாங்க.

வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றம்

அப்படி இருந்தும், வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. சரி 'ஜான் டோ' உத்தரவு அப்படின்னா என்ன, அது எதுக்காக போடப்படும்?, அப்படி ஒரு உத்தரவு இருக்கா அப்படிங்கிறத விளக்கமா பார்க்கலாம்.

வழக்கமாக நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டால், யார் மீது குற்றம் சாட்டப்படுகிறதோ அவர்களின் பெயர், முகவரி தெளிவாக இருக்கும். நீதிமன்றமும் அந்தக் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராகவே உத்தரவுகளை பிறப்பிக்கும்

'ஜான் டோ' உத்தரவு என்றால் என்ன?

ஆனால், விதியை மீறப் போகிறவர்கள் யார் என்றே முன்கூட்டியே தெரியாத இக்கட்டான சூழலில் 'ஜான் டோ' உத்தரவு பிறப்பிக்கப்படுது.

சட்ட உலகில் கற்பனை பெயர்

'ஜான் டோ' என்பது எந்தவொரு தனிநபரோட பெயரும் கிடையாது. அடையாளம் தெரியாதவர்களைக் குறிக்கச் சட்ட உலகில் பயன்படுத்தப்படும் ஒரு கற்பனைப் பெயர்.

சுருக்கமாக சொன்னா, தவறு செய்ய வாய்ப்புள்ள அடையாளம் தெரியாத நபர்கள் அனைவருக்கும் சேர்த்துப் போடப்படும் ஒட்டுமொத்தத் தடை தான் 'John Doe' உத்தரவு.

இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாராவது தடையை மீறினால், அப்போது அவர்களின் உண்மையான பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

14ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அமல்

சரி 'John Doe' பெயருக்கு பின்னால சுவாரஸ்யமான வரலாறு இருக்கு. 14ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் எட்வர்ட் காலத்தில்தான் இந்த வழக்கம் தொடங்கியதா சொல்லப்படுது.

சொத்துத் தகராறு வழக்குகளில் எதிர்தரப்பினர் யார் எனத் தெரியாதபோது, அவர்களைக் குறிக்க 'ஜான் டோ' என்ற பெயரை நீதிமன்றங்கள் பயன்படுத்தின.

பின்னர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளின் சட்ட நடைமுறைகளுக்கும் இது பரவியது.

இந்தியாவில் 2002ல் அமல்

இந்தியா பொருத்தவரை முதன்முறையா 2002ம் ஆண்டு, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒளிபரப்பு உரிமம் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்திற்குத் தெரியாமல், நாடு முழுவதும் பல உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் போட்டிகளை சட்ட விரோதமாக ஒளிபரப்பினர்.

அத்தனை பேரையும் தேடிக் கண்டுபிடித்துப் பெயர் சேர்டது சட்டத்தின் முன் கொண்டு வர முடியாது. அப்போதுதான் முதன்முறையாக டெல்லி உயர் நீதிமன்றம் 'தாஜ் டெலிவிஷன்' வழக்கில் 'ஜான் டோ' உத்தரவைப் பிறப்பிச்சது.

காலப்போக்கில் இந்திய நீதிமன்றங்கள் 'ஜான் டோ' என்பதற்குப் பதிலாக, அடையாளம் தெரியாதவர்களைக் குறிக்க 'அசோக் குமார்' என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கின. அதனால் இந்தியச் சட்ட வட்டாரத்தில் இதனை 'அசோக் குமார் உத்தரவு' என்றும் அழைப்பாங்க.

சமீப ஆண்டுகளில் அமிதாப் பச்சன் போன்ற திரைப் பிரபலங்களும் இதன் உதவியை நாடினாங்க. செயற்கை நுண்ணறிவு மூலம் தங்கள் புகைப்படத்தையும் குரலையும் அடையாளம் தெரியாத நபர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க 'ஜான் டோ' உத்தரவுதான் அவங்களுக்கு கைகொடுத்துச்சு.

====================