

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர், கைது செய்யப்பட்டு காவல்நிலையதில் விசாரணையின் பொது மரணம் அடைந்தார்.
அவர் இறந்து விட்டதாக காவல்துறையினர் கூறினார். இது லாக் அப் மரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, 6 தனிப்படை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ வலாளி அஜித் குமாரின் உறவினர்கள் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால்தான் இறப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
சமீப காலமாக, லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனையளிக்கிறது. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல; அவர்களின் செயல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
வரும்காலங்களில் இதுபோன்ற துர்ச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும். இவ்விஷயம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
====