"கோவில் சொத்துக்களை பாதுகாப்பதில் துரோகம்": அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு

Madras High Court : அதிகாரிகளின் அலட்சியங்களினால் ஏராளமான கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளன, இதை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Madras High Court condemned loss temple properties due to negligence of officials
Madras High Court condemned loss temple properties due to negligence of officialsSource : Google
1 min read

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

Madras High Court has condemned the loss of a large number of temple properties due to the negligence of officials, saying this cannot be allowed : சேலம் மாவட்டம் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் சேலத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அறநிலையத்துறைக்கு உத்தரவு

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சேலம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று (24.02.26) மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி நேரில் ஆஜரானார்.

அதிகாரியிடம் நீதிபதிகள் கேள்வி

"கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள்; ஆனால், அந்தப் பணியை முறையாக செய்யாமல் கோவிலுக்கு துரோகம் செய்கிறீர்கள்" என்று இந்து அறநிலைத்துறைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு கண்டனம்

அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியங்களினால் ஏராளமான கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளன. இவ்வாறான அலட்சியங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், இவைகளின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உரிய இழப்பீடு வசூலிக்க...

இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள கனிம வள கொள்ளைகளுக்கு உரிய இழப்பீடுகள் வசூலிக்கப்பட வேண்டும் என்றும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். .

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in