
குழப்பத்தின் பிடியில் பாமக :
PMK Ramadoss vs Anbumani Case Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஓய்ந்தபாடில்லை. நீயா?, நானா? என்ற ரீதியில் இருவரும் போட்டி போட்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழுவை நடத்துகிறார் அன்புமணி. இதேபோன்று ராமதாசும் வரும் 17ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறார்.
அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு :
அன்புமணி மீது சரமாரியாக புகார்களை தெரிவித்து வரும் ராமதாஸ், தான் தான் உண்மையான பாமக என்றும், அன்புமணியின் தலைவர் பதவி மே மாதமே முடிந்து விட்டதாகவும், எனவே, பொதுக்குழுவை கூட்ட அவருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு(Madras High Court) தொடுத்தார். எனவே, அன்புமணி கூட்டம் பொதுகுழுவிற்கு தடை விதிக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ராமதாஸ், அன்புமணியை வரச்சொல்லுங்க :
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை ஐந்தரை மணிக்கு ராமதாஸ், அன்புமணி இருவரும் எனது அறைக்கு வர வேண்டும். உடனே ராமதாஸை கிளம்ப சொல்லுங்கள், இது எனது வேண்டுகோள். அனைவரின் நலனுக்காகவும், பாமக நலன் கருதியும், இருவரிடம் நானே பேச்சுவார்த்தை நடத்த போகிறேன்.
மேலும் படிக்க : ’பாமகவை கைப்பற்ற அன்புமணி சூழ்ச்சி’ : ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
கட்சிக்காரர்கள் வரக்கூடாது :
இருவரிடமும் பேசும் போது கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள் யாரும் உடன் இருக்க கூடாது. நீதிமன்ற வேலை நேரம் முடிந்ததும், இருவரும் எனது அறைக்கு வர வேண்டும். இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை ஏற்று ராமதாசும், அன்புமணியும்(Ramadoss Anbumani Issue) இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகின்றனர்.
====