

அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிரான புகார்
Madras High Court orders registration of case against Minister KN Nehru ED Case Update in Tamil : தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது, நகராட்சித்துறையில் வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் மற்றும் டெண்டர் முறைகேடு புகார்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே. என். நேருவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமைச்சர் கே.என். நேரு வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி அமலாக்கத்துறைனர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் கே.என். நேருவின் துறைகளில் மோசடி நிகழ்ந்துள்ளதாக குற்றம்சாட்டி தமிழக டிஜிபிக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டது.
நடவடிக்கை எடுக்காத தமிழக டிஜிபி
ஆனால் அமலாக்கத்துறையின் இந்த கடிதங்களுக்கு டிஜிபி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர், அமைச்சர் கே.என். நேரு துறைகள் மீதான அமலாக்கத்துறையின் கடிதங்கள் அடிப்படையில் டிஜிபி தரப்பு புகார் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக எம்.பி. மனுத்தாக்கல்
அதேபோல் அதிமுக எம்.பி. இன்பதுரை நகராட்சித் துறை வேலை வாங்கித் தருவதாக சுமார் ₹1,020 கோடி ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டை மறுத்த கே.என்.நேரு
நகராட்சித்துறையில் வேலை வாங்கித்தருவதாக லஞ்சம் மற்றும் டெண்டர் முறைகேடு குறித்தான புகார்களை அமைச்சர் கே.என். நேரு தொடர்ந்து மறுத்து வந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை
அதிமுக எம்.பி. இன்பதுறை, மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் ஆகிய இருவர் தொடர்ந்த மனுத்தாக்கல் தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் ஏற்கெனவே நடைபெற்று வந்தது.
போதுமான ஆதாரம் இருக்கும் போது காலதாமதம் ஏன்?
இந்த வழக்கை இன்ரு விசாரித்த நீதிபதிகள், ஒரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்ய அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்கியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும் போது பல மாதங்கள் ஆகியும் ’விரிவான விசாரணை ’ என்ற பெயரில் கால தாமதமாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளர்.
தமிழக அரசு தரப்பு வாதம்
அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின் படி விசாரணை நடத்த 180 நாட்கள் அவகாசம் உள்ளதாக வாதிட்டனர்.
மேலும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A-ன் கீழ் அனுமதி பெறப்பட்டு, டிச.15 ஆம் தேதி முதல் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் வாதிட்டனர்.
அமலாகத்துறை வழக்கறிஞர் வாதம்
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ், அமலாக்கத்துறை வழங்கியது வெறும் தகவல் மட்டுமல்ல, அவை அனைத்தும் மிக முக்கியமான "ஆதாரங்கள்" என்று வாதாடினார்.
FIR பதிவு செய்ய உத்தரவு
அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே வழக்குப்பதிவு செய்வது அவசியமானது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.