
மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் “ ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அமைப்பதா? என்று கேள்வி எழுப்பினர். ரம்மி விளையாட்டை முறைப்படுத்த நினைக்கும் அரசு, டாஸ்மாக் விவகாரத்தில் வேறு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.
டாஸ்மாக்கை நடத்துவது அரசின் வேலையா? ஏன் நடத்த வேண்டும்? ஏன் விற்பனை செய்கிறீர்கள்? மதுபான கடைகளை மூடுவதாக வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவது கிடையாது.
மதுவே ஊழல் போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். வேலைவாய்ப்பு, பொது மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
====