” தாமிரபரணி ஒரு தெய்வம்” : ஆடைகள், பொருட்களை வீசத்தடை : ஆளுமை அந்தஸ்து வழங்கி உயர்நீதிமன்றம் அங்கீகாரம்..!

தாமிரபரணி ஆற்றுக்கு தெய்வ அந்தஸ்து வழங்கி அங்கீகரித்து உள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஆடைகளை வீசத்தடை விதித்து இருக்கிறது.
Madurai High Court, accorded status of a deity to Thamirabarani River, banned  dumping of clothes
Madurai High Court, accorded status of a deity to Thamirabarani River, banned dumping of clothes AI generated
1 min read

தாமிரபரணி ஆறு

தென் தமிழகத்தில் பாயும் ஜீவநதி புனித தாமிரபரணி ஆறு. இதில் மதச் சடங்குகள் என்ற பெயரில் துணிகள் வீசப்படுவதால், சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஆற்றில் துணிகள் வீச எதிர்ப்பு

தாமிரபரணி ஆற்றில் துணிகளை வீசுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்தது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”தாமிரபரணி ஆற்​றின் படித் துறை​களில் முன்​னோருக்​குச் சடங்​கு செய்​யும் ​போது, தின​மும் ஒரு டன்​னுக்கு குறை​யாத அளவு பயன்​படுத்​தப்​பட்ட, பயன்​படுத்​தப்​ப​டாத ஆடைகள், துண்​டு​கள், காலணி​கள் மற்​றும் இறந்​தவர்​களு​டன் தொடர்​புடைய பொருட்​கள் ஆற்​றில் வீசப்​படு​கின்​றன.

மதத்தின் பெயரால் நீர்நிலையை மாசுபடுத்த கூடாது

மதத்​தின் பெய​ரால்​கூட நீர்​நிலையை மாசுபடுத்த யாருக்​கும் உரிமை இல்​லை. தூய பருத்​தி​யால் நெய்​யப்​பட்ட ஆடைகள் இயற்​கை​யில் மட்​கக் கூடிய​வை. பாலியஸ்​டர் துணி​கள் மக்​கு​வ​தில்​லை.

ஆமைகள், மீன்களுக்கு ஆபத்து

நூறு ஆண்​டு​கள் வரை வாழும் இந்​தி​யக் கருப்பு ஆமை மற்​றும் இந்​திய ஃப்​ளாப்​ஷெல் ஆமை​களின் வாழ்​விட​மாக​ தாமிரபரணி ஆறு உள்​ளது. இந்த வகை ஆமை​கள், ஆற்​றில் வீசப்​பட்ட துணி​களில் சிக்கி இறக்​கின்​றன.

ஆற்​றில் வீசப்​படும் சோப்​பு, ஷாம்பு போன்ற ரசாயனங்​களின் பயன்​பாடு மீன்​களுக்கு உயி​ரிழப்பை ஏற்​படுத்​துகிறது.

நீர் நிலைகளை காக்க வேண்டும்

நீர் நிலைகளை எந்த வகை​யிலும் மாசுபடுத்​து​வதை ஏற்க முடி​யாது. சம்பிரதாயங்கள் இந்துக்​களின் நம்​பிக்​கைகள் மற்​றும் உணர்​வு​களு​டன் தொடர்​புடையது.

தாமிரபரணி ஆற்​றங்​கரை​யில் சடங்​கு​கள் மற்​றும் வழி​பாடு​களை முறைப்​படுத்​து​வ​தால் அடிப்​படை உரிமை​கள் மீறப்​ப​டாது.

இந்துக்கள் வழிபடும் தாமிரபரணி

சுற்​றுச்​சூழல் பாதிப்பு இல்​லாமல், மக்​களின் உரிமை​களை மீறாமல் இருக்​கும் நிலை​யில் பக்​தர்​கள் ஆன்​மிகச் செயல்​களை மேற்​கொள்​ளலாம்.

இந்​துக்​களால் தாமிரபரணி ஆறு புனித​மான​தாகக் கருதப்​படு​வதை​யும், அதை வழிபடு​வதை​யும் நாங்​கள் அங்​கீகரிக்​கிறோம்.

தாமிரபரணிக்கு ’ஒரு நபர்’ அங்கீகாரம்

தாமிரபரணி ஆறு ‘தாமிர தேவி'​யாக உரு​வகப்​படுத்​தப்​படு​கிறது. தாமிரபரணி ஆற்றை ‘ஒரு நபராக’ நாங்​கள் அங்​கீகரிக்​கிறோம். ஆறுகளைத் தெய்​வங்​களாகக் கருதும் நாம்​தான் கழி​வு​களை​யும் உரு​வாக்​கு​கிறோம்.

ஆடைகளை வீசத் தடை

எனவே, தாமிரபரணி ஆற்​றில் ஆடைகள் மற்​றும் பிற பொருட்​களை வீசத் தடை விதிக்​கப்​படு​கிறது. ஆற்றை மாசுபடுத்​து​வது நீதி​மன்ற அவம​திப்​புச் செய​லாகக் கருதப்​படும் என்று மக்​களுக்​குத் தெரிவிக்க வேண்​டும். ஆற்றை மாசுபடுத்​து​வோருக்கு அபராதம் விதிக்க வேண்​டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in