
Madurai HC Ban Chicken Goat Sacrifice in Thiruparankundram Hill : மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணியம் சுவாமி கோயிலும், காசி விஸ்வநாதர் கோயிலும், மலை உச்சியில் இஸ்லாமியர்களின் சுல்தான் சிக்கந்தர் தர்ஹாவும் உள்ளன.
திருப்பரங்குன்றம் மலை
சுல்தான் சிக்கந்தர் தர்ஹா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு அங்கிருந்து தர்ஹாவுக்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின் போதே நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
சிக்கந்தர் தர்கா
இந்த நிலையில், சிக்கந்தர் தர்ஹாவில் சந்தனக் கூடு விழாவையொட்டி ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி பலியிடுவதற்காக ஆடுகளை எடுத்துச் செல்ல முயன்றதாக இஸ்லாமிய அமைப்பினரை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
ஆடு, கோழி பலியிட நீதிமன்றம் தடை
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி பலியிட தடை கோரி பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். மூன்றாவது நீதிபதி விஜயகுமார், இந்த வழக்கை விசாரித்து, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி, பலியிட தடை விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்றம் சம்மட்டி அடி - எல். முருகன்
இதுபற்றி மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “ திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவோம் என்று கூறி அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திருப்பரங்குன்றம் வழக்கில் 2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் படிக்க : திருச்செந்தூரில் 27ம் தேதி சூரசம்ஹாரம் : 5 லட்சம் பேர் பங்கேற்பு
நீதி வென்று இருக்கிறது
அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மதுரை முருகர் மாநாட்டில் தமிழகமே ஒன்று திரண்டது. இந்துக்களின் ஒற்றுமையை எதிரொலித்து, தர்மம் வென்றது தற்போது சட்டத்தின் வாயிலாக நீதி வென்றுள்ளது” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
===