'ஓரணியில் தமிழ்நாடு' : OTP எண் பெற நீதிமன்றம் அதிரடி தடை

Madurai HC on Oraniyil Tamil Nadu : ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு, மொபைல் போனில் ஓ.டி.பி., எண் பெறுவதற்கு, ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்தது.
Madurai High Court Bench on Oraniyil Tamil Nadu OTP Issue
Madurai High Court Bench on Oraniyil Tamil Nadu OTP Issue
1 min read

திமுகவின் ’ஓரணியில் தமிழ்நாடு’ :

Madurai HC on Oraniyil Tamil Nadu : மக்களை இல்லம் தேடி சென்று, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், திமுகவினர் கட்சி உறுப்பினர்களாக சேர்த்து ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு செல்லும் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கின்றர். இதற்கு பொதுமக்களிடமும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அரசு தொடர்பான நிறுவனங்கள் ஆதார் உள்ளிட்ட விவரங்களை கேட்டால் தரலாம். ஒரு அரசியல் கட்சிக்கு எதற்காக இந்த விவரங்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு :

திமுகவினர் இவ்வாறு விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள்,

*உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தலாம், ஆனால் ஓடிபி விவரங்களை கேட்கக் கூடாது.

* டிஜிட்டல் முறையில் தனி நபர் தகவல் பாதுகாக்கப்படுவது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.

* தேர்தல் ஆணையமும் இதுபற்றி உரிய பதில் அளிக்க வேண்டும்.

* ஓடிபி(OTP) விவரங்களை கேட்க வேண்டாம் என்று காவல்துறையினர் கூறும் நிலையில், திமுகவினர் எதற்காக இதைக் கேட்கிறார்கள்?

* ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் இதனை விற்பனை செய்தால் என்ன நடக்கும்?

* சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்த திட்டங்கள் ஏதும் இல்லை.

* வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.

* மொபைல் போனில் ஓடிபி எண் பெறுவதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவு.

மேலும் படிக்க : திமுக அரசு அறிவித்த புதிய திட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் தடை

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in