”அரசு வேலைக்கான ஆணை ரத்து” : கரூர் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு : திறன் பயிற்சிகள் வழங்க TVK அரசுக்கு யோசனை..!

கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலைக்கான அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, திறன் பயிற்சி வழங்கலாம் என அறிவுறுத்தி உள்ளது.
Madurai High Court has quashed  government order granting government jobs to 31 individuals in Karur
Madurai High Court has quashed government order granting government jobs to 31 individuals in KarurAI generated
2 min read

கரூர் கூட்ட நெரிசல்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.

உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு தவெக சார்​பில் ரூ.20 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​பட்​டது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு, உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்​யப்​பட்​டது.

31 பேருக்கு அரசுவேலை

அதன்படி, கரூரில் கடந்த 10ம் தேதி நடந்த நிகழ்​வில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தைச் சேர்ந்த 31 பேருக்​கு, அவர்​களது கல்​வித் தகு​திக்கு ஏற்ப பல்​வேறு துறை​களில் இளநிலை உதவி​யாளர், அலு​வலக உதவி​யாளர் உள்​ளிட்ட பணிக்​கான ஆணை​களை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

பொதுநல மனுக்கள் தாக்கல்

கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​துக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்​கக் கோரி நாதக நிர்​வாகி தீரன் திரு​முரு​கன், மதுரை வழக்​கறிஞர் சீனி அகமது மற்​றும் சந்​தோஷ்கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பொதுநல மனுக்​கள் தாக்​கல் செய்​தனர்.

விசாரணையை பாதிக்கும் என வாதம்

‘கரூர் சம்​பவம் தொடர்​பான சிபிஐ விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தின் நேரடி கண்​காணிப்​பில் உள்​ளது. உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கு​வது விசா​ரணையை பாதிக்​கும்.

சாட்​சிகளை கலைக்​கும் நடவடிக்​கை​யாகும். இது தவறான முன்​னு​தா​ரணத்​தை​யும் ஏற்​படுத்​தும். போட்​டித் தேர்​வு, தகுதி அடிப்​படை​யில் மட்​டுமே அரசுப் பணி வழங்க வேண்​டும்.

எனவே சிபிஐ, உச்ச நீதி​மன்ற விசா​ரணை முடி​யும் வரை அரசு வேலை வழங்​கத் தடை விதித்து உத்​தர​விட வேண்​டும்’ என்று மனுக்​களில் கோரப்பட்டது.

நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், ஆர்​.சக்​திவேல் அமர்​வில் இந்த மனுக்​கள் மீது விசாரணை நடைபெற்றது.

மனு​தா​ரர்​கள் வாதம்

அரசுப் பணிக்​கான போட்​டித் தேர்​வுக்​காக லட்​சக்​கணக்​கான இளைஞர்​கள் இரவு, பகலாக தயா​ராகி வரு​கின்​றனர். அப்​படி இருக்க, நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கு​வது சட்ட விரோதம்.

கருணை அடிப்​படையில் பணி எப்​படி வழங்க வேண்​டும் என்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் பல வழி​காட்​டு​தல்​களை வழங்​கி​யுள்​ளது. அதை பின்​பற்​றாமல் அரசுப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அரசுப்பணி தேவையில்லை

பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு இழப்​பீடு வழங்​கிய பிறகும், அரசுப் பணி வழங்க வேண்​டிய அவசி​யம் என்ன?.

ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச்​சூடு, மதுரை கவுன்​சிலர் லீலா​வதி கொலை சம்​பவங்​களில் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்​கிய​தாக அரசுத் தரப்பு கூறுகிறது. அந்த சம்​பவங்​களு​டன் கரூர் சம்​பவத்தை ஒப்​பிட முடி​யாது.

அரசுத் தரப்​பு வாதம்

பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு தற்​காலிகப் பணி​யே, அது​வும் சாதா​ரணப் பணியே வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதற்கு முன்​பும் இது​போன்ற பல சம்​பவங்​களில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு கருணைப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதி​மன்​றம் தலை​யிட முடி​யாது.

பாதிக்​கப்​பட்​டோர், தங்​கள் குடும்​பத்​தில் விலைம​திக்க முடி​யாத ஒரு​வரை இழந்​துள்​ளனர். அவர்​களுக்கு உதவும் வகை​யில்​தான் அரசுப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதனால் வழக்கு விசா​ரணை எந்த வகை​யிலும் பாதிக்​காது. ரூ.10 லட்​சம் இழப்​பீடு போது​மான​தாக இருக்​காது என்​ப​தாலேயே அரசுப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது.

வயது, கல்​வித் தகுதி தொடர்​பான வழி​காட்​டு​தல்​களைப் பின்​பற்​றியே கருணைப் பணி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை ஏன் எதிர்க்க வேண்​டும்?

ஒவ்​வொரு துறை​யிலும் காத்​திருப்​போர் பட்​டியல் உள்​ளது. அதை பரிசீலித்து முறைப்​படியே பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள். உடனடி​யாக பணி நிரந்​தரம் செய்​யப்பட மாட்​டார்​கள்.

இந்த மனுக்​கள் விசா​ரணைக்கு உகந்​தது அல்ல. அவற்றை தள்​ளு​படி செய்ய வேண்டும்.

நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு

கரூர் விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் கண்​காணிக்​கும் சூழலில் அதுபற்றி கருத்து தெரிவிக்க நீதி​மன்​றம் விரும்​ப​வில்​லை.

அதே​நேரம், அரசுப் பேருந்து விபத்​துகள், சிவ​காசி பட்​டாசு ஆலை விபத்​துகளில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்​கும் இதே​போல அரசு வேலை கேட்​டால் என்ன செய்​வது என்ற கேள்வி எழுகிறது.

கருணை அடிப்​படையி​லான வேலை என்​பது அரசுப் பணி​யில் இருந்து உயி​ரிழப்​போரின் வாரிசுகளுக்கு வேலை வழங்க மட்​டுமே பொருந்​தும்.

திறன் பயிற்சி வழங்கலாம்

கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்த குடும்​பத்​தினருக்கு அரசு உதவி செய்​வ​தாக இருந்​தால் பாதிக்​கப்​பட்​டோர் குடும்​பத்​தினருக்கு திறன்​ பயிற்​சிகளை வழங்கி உதவலாம். இவ்​வாறு பணி வழங்​கு​வதை​விட அது பயனுள்​ள​தாக இருக்​கும்.

அரசுப் பணி​யில் எது​வும் சாதா​ரணப் பணி அல்ல. அது ஒரு​வரது குடும்​பத்​துக்கு உதவும் பணி​யே.

அரசுப் பணிக்கான அரசாணை ரத்து

எனவே, கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​துக்கு அரசுப் பணி வழங்கி பிறப்​பித்த அரசாணை ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறி​யுள்​ளனர்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in