"மகளிர் விடியல் பயணம், இனி மகளிர் பயணம்" : மாற்றம் செய்த தவெக அரசு : அரசு பேருந்துகளில் அமல்...!

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளில் விடியல் பயணம் என்ற திட்டத்தின் பெயரை மகளிர் பயணம் என்று மாற்றம் செய்துள்ளது தவெக அரசு
magalir vidiyal payanam" is now simply "magalir payanam "TVK government change
magalir vidiyal payanam" is now simply "magalir payanam "TVK government change google
1 min read

மகளிர் விடியல் பயணம்

தமிழகத்தின் முதன்முறையாக மகளிருக்கு இலவச பேருந்து சேவையை திமுக அரசு கொண்டுவந்தது, இந்த இலவச திட்டத்தின் மூலமாக தமிழகத்தின் அனைத்து மாநாகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற இலவச திட்டத்தை அமல்படுத்தியினர்

இந்த இலவச திட்டம் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணககான பெண்கள் தமிழகம் முழுவதும் இலவசமாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்

மகளிர் விடியல் பயணம் , விடியல் வார்த்தையை நீக்கிய தவெக அரசு

திமுக அரசால தொடங்கப்பட்ட மகளிர் விடியல் பயணம் எனற திட்டத்தின் பெயரை , ’மகளிர் பயணம் ’ என்று மாற்றம் செய்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்துள்ளது ,

அதன் படி அனைத்து மாநாகர பேருந்துகளிலுல் இனி ’மகளிர் பயணம் ’ என்றே அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது

நான் முதல்வன் திட்டத்தின் பெயரையும் மாற்றம் செய்த தவெக அரசு

இதற்கு முன்னதாக, முந்தைய திமுக அரசு கொண்டு வந்திருந்த 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரையும் 'திறன் தமிழ்நாடு' என சமீபத்தில் மாற்றம் செய்திருந்தது , இதற்கு எதிர்கட்சிகளிடையே கடும் எதிர்ப்பானது கிளம்பியிருந்தது

2021யில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குதான் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் இலவச பேருந்து, கோப்புகளில் கையெழுத்திடாத முதல்வர் விஜய்

தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான , மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்திற்கு இதுவரை கயெழுத்திட வில்லை. இந்த நிலையில் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் விடியல் பயணம் திட்டமே நடைமுறையில் இருந்து வரும் நிலையில் , அதில் விடியல் என்ற வார்தையை நீக்கி மகளிர் பயணம் என்று மாற்றத்தை தவெக அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in