"நம்ம இயக்கம்", "மக்கள் மேடை" : அண்ணாமலை, லதா ரஜினியின் இயக்கங்கள் : தவெகவுக்கு போட்டி! திராவிட கட்சிகளுக்கு செக்!

தமிழக அரசியலில் பெரிய மாற்றமாக, அண்ணாமலை, லதா ரஜினிகாந்த் புதிய இயக்கங்களை தொடங்கி இருக்கிறது. திராவிட கட்சிகளுக்கு எதிர்காலத்தில் சவாலாக இருக்கும் என்று பேசப்படுகிறது.
major change in Tamil Nadu politics, Annamalai and Latha Rajinikanth have started new movements
major change in Tamil Nadu politics, Annamalai and Latha Rajinikanth have started new movementsgoogle
2 min read

தமிழக அரசியல் மாற்றங்கள்

தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் வேகமாக அரங்கேறி வருகின்றன. 59 ஆண்டுகளாக திமுக அல்லது அதிமுக ஆட்சி தான், இருதுருவ அரசியல் தான் தமிழகத்தின் இலக்கணம் என்ற கோட்பாடு உடைத்து எறியப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், திராவிட கட்சிகள் கூட முடிவு எடுக்க தயங்கும் தனித்து போட்டி என்ற உறுதியோடு களம் கண்டார்.

திமுகவின் கூட்டணி பலம், அதிமுகவும் கூட்டணி அமைத்து இருக்க இந்த தேர்தலில் தவெக சொற்ப இடங்களை மட்டுமை கைப்பற்றும் அப்படின்னு கூறப்பட்டது.

முதல் தேர்தல், நேரடியாக அரியணை

ஆனால், இளம் வாக்காளர்கள், பெண்களின் பேராதரவோடு தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, திமுக கூட்டணியை உடைத்து அதில் இருந்த கட்சிகளோடு கம்பீரமாக அரியணை ஏறி இருக்கிறது.

இந்த தேர்தல் திராவிட கட்சிகளுக்கு ஒருபாடமாக இருக்க, இளம் தலைமுறை வாக்காளர்கள் தான் இனி யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்க போகிறார்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது.

தனி இயக்கம் தொடங்கிய அண்ணாமலை

சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருக்க, அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனி இயக்கம் தொடங்கி இருக்கிறார்.

புதிய கட்சி தொடங்க வேண்டும் 2031 சட்டசபை தேர்தலில் தவெகவிற்கு சரியான போட்டியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார் அண்ணாமலை.

தனித்துவமே இறுதி முடிவு

தேசிய கட்சி அல்லது மாநில கட்சியின் முகமாக இல்லாமல், தனித்துவத்துடன் செயல்படுவதே அவர் லட்சியம்.

"இது நம்ம இயக்கம்"

"இது நம்ம இயக்கம்" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தல் களத்திலும் குதிக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான இயக்கம்

புதிய தலைமுறையினரை அரசியல்படுத்துவது, சாமானிய மக்களின் அரசியலை முன்னிறுத்துவது, அறம் சார்ந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவது போன்ற நோக்கங்களுடன் இந்த இயக்கம் செயல்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

அனைத்து தேர்தலிலும் போட்டி

உள்ளாட்சித் தேர்தல்கள் முதல் பொதுத் தேர்தல்கள் வரை தீவிரமாக செயல்படும் திட்டமும் உள்ளது.

லட்சக் கணக்கானோர் பதிவு

இயக்கத்தில் இணைவதற்கான இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குறுகிய நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால், பாஜகவில் இருந்து விலகிய பிறகும் அண்ணாமலைக்கு தனிப்பட்ட ஆதரவு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.

"மக்கள் மேடை"

இந்தநிலையில்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த், "மக்கள் மேடை" என்ற பெயரில் தொடங்கி இருக்கும் புதியஅயக்கம் அரசியல் கட்சியாக அல்லாமல் சமூக பங்களிப்பு மற்றும் மக்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட இயக்கமாக செயல்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

மக்களுக்கான இயக்கம்

மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும், பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

தலைவர்களை உருவாக்குவோம்

உள்ளூர் அளவில் புதிய தலைவர்களை உருவாக்கி சமூக வளர்ச்சிக்காக பணியாற்றும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளது. லதா ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏனெனில், கடந்த காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தாலும், உடல்நலக் காரணங்களால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு ரஜினி குடும்பத்தினர் அரசியல் தொடர்பான எந்த முயற்சியிலும் நேரடியாக ஈடுபடவில்லை.

வெறும் இயக்கமா அரசியல் கட்சியா?

"மக்கள் மேடை" என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதால், இது எதிர்காலத்தில் அரசியல் வடிவம் எடுக்கும் முயற்சியா அல்லது சமூக சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரே நாளில் இரண்டு இயக்கங்கள்

அண்ணாமலையின் புதிய இயக்கத்துக்கும் லதா ரஜினிகாந்தின் புதிய அமைப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற விவாதமும் அரசியல் வட்டாரங்கள் பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் எதிர்கால அரசியல்

விஜயின் அரசியல் வெற்றி, அண்ணாமலையின் புதிய அரசியல் முயற்சி, லதா ரஜினிகாந்தின் மக்கள் இயக்கம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழக அரசியலை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

2031ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய திருப்பங்களோடு, வித்தியாசமான கூட்டணிகளோடு தான் இருக்கும் என்று இப்போதே தெரிய வருகிறது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in