மே 1 முதல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் அதிரடி மாற்றம்! புதிய கட்டுப்பாடுகள் அமல் : முழு விவரம்!

LPG Cylinder New Rules May 1: சிலிண்டர் விநியோகத்தைச் சீராக வைத்திருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
Major Changes in Gas Cylinder Delivery from May 1st! New Restrictions Implemented
Major Changes in Gas Cylinder Delivery from May 1st! New Restrictions Implemented source: AI generated
1 min read

Major Changes in Gas Cylinder Delivery from May 1st! New Restrictions Implemented — Full Details!

மே 1 முதல் புதிய நடைமுறைகள்

எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை மற்றும் விநியோகிக்கும் நடைமுறைகளில் மே 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சூழல் மற்றும் உள்நாட்டு தேவை

சர்வதேச அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு ஆகியவற்றை முன்னிட்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு இடைவெளியில் மாற்றம்

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.

21-ல் இருந்து 25 நாட்கள்

நகரப்பகுதிகளிகளில் ஒரு சிலிண்டர் பெற்று அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்யக் குறைந்தபட்சம் 21 நாட்கள் என்று இருந்த இடைவெளி, தற்போது 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டருக்கு 45 நாட்கள்

அதேபோல் கிராமப்புறப் பகுதிகளில் இந்த இடைவெளி 45 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வு மற்றும் விநியோகம்

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை சுமார் ரூ. 60 வரை உயர்ந்துள்ளது.

வணிக சிலிண்டர் விலை

வணிக ரீதியான சிலிண்டர்களின் விலை நகரங்களுக்கு ஏற்ப ரூ. 196 முதல் ரூ. 218 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விநியோகத்தைச் சீராக வைத்திருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்குக் கட்டாயம்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன் பெறுவோர் தங்களின் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் கட்டாயம்

இதுவரை பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்யாதவர்கள் இ-கேஒய்சி மூலம் உறுதி செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

நிதியாண்டின் தொடக்கத்தில் பயோமெட்ரிக் உறுதிப்பாடு

மேலும் உஜ்வாலா பயனாளர்கள் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பயோமெட்ரிக் உறுதிப்பாட்டைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுதி செய்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை.

குழாய் வழி எரிவாயு (PNG) திட்டம்

சிலிண்டர் விநியோகத்தைக் குறைத்து, விரைவில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் முறையை நாடு முழுவதும் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.

அவ்வாறு குழாய் வழிச் சேவை பெறுவோர், தங்களிடம் உள்ள சிலிண்டர்களைத் திரும்ப ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in