

மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிரபல Tanishq நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் புதன்கிழமை இரவு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடையில இருந்த சுமார் 15 முதல் 20 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் சரியான அளவு மற்றும் அதன் மதிப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த கொள்ளை சம்பவத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், கடைக்குள் மர்ம நபர் நுழைந்த விதம்தான்.
போலீசார் ஆய்வு செய்த சிசிடிவி காட்சிகளில், ஒருவர் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து லிஃப்ட் செல்லும் பாதை வழியாக உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நபர் எப்படிக் கடைக்குள் நுழைந்தார், எவ்வளவு நேரம் அங்கு இருந்தார், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எப்படி கொண்டு சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண்பதற்காக கடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், கொள்ளை நடைபெற்ற நேரம், மர்ம நபரின் நடமாட்டம் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
தற்போது வரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் துல்லியமான அளவும், அவற்றின் மதிப்பும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது
மதுரையில் உள்ள இந்த Tanishq நகைக்கடை திறக்கப்பட்டு வெறும் 15 நாட்கள்தான் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடை திறந்து இரண்டு வாரங்களே கடந்த நிலையில், இவ்வளவு பெரிய அளவில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
=====================