GEM Veeramani Case : போலீசாருக்கே சிக்கல்... அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு..!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 காவல்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு ...
Major Twist in POCSO Case: Former Chennai Police Commissioner Arun IPS Named in FIR!
Major Twist in POCSO Case: Former Chennai Police Commissioner Arun IPS Named in FIR!Google
1 min read

வழக்கில் சேர்க்கப்பட்ட அருண் ஐபிஎஸ் :

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தாமல், வழக்கை முடிப்பதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகக் காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், முன்னாள் உதவி ஆணையர் எம்.ஏ. யாஸ்மின் உள்ளிட்ட 7 பேர் தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு?

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை புகாரளிக்க தவறியதற்காக போக்சோ சட்டத்தின் 21-வது பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பா, ஆதாரங்களை மறைத்தல், தவறான சாட்சியம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் :

இதற்கிடையே, வீரமணி மற்றும் அவரது இரண்டு கார் ஓட்டுநர்களுக்கு எதிராக 720 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ளது.

இதில் 40 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை :

இந்த வழக்கில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் என்னென்ன குறைபாடுகள் இருந்தன, புகார் அளிக்கப்பட்டபோது காவல்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன, வழக்கை முடிக்க முயற்சி செய்யப்பட்டதா என்பது குறித்தும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

இதனால் இந்த வழக்கு தற்போது காவல்துறை வட்டாரத்திலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

=====================