Kamal MP : ’கமல்ஹாசன் எனும் நான்’ : ராஜ்யசபா எம்பியாக பதவியேற்பு

Kamal Haasan Take Oath As Rajya Sabha MP : ராஜ்யசபா எம்பியாக தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்றுக் கொண்டார்.
Actor MNM Leader Kamal Haasan Take Oath As Rajya Sabha MP Today
Actor MNM Leader Kamal Haasan Take Oath As Rajya Sabha MPANI
1 min read

தமிழக ராஜ்யசபா எம்பிக்கள் :

Kamal Haasan Take Oath As Rajya Sabha MP : தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக இருந்த வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், சண்முகம், என். சந்திரசேகரன், முகமது அப்துல்லா ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஜூலை 24 (நேற்றுடன்) நிறைவு பெற்றது. எனவே, இதற்காக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானார்கள். அதேபோல அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :

பழைய உறுப்பினர்கள் 6 பேர் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். `கமல்ஹாசன் எனும் நான்..’’ என தமிழில் கூறி எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன்(MP Kamal Haasan Taking Oath). பதவியேற்றுக் கொண்ட கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

மேலும் படிக்க : Rajya Sabha MP : ”இந்தியனாக என் கடமையை செய்வேன்”: கமல்ஹாசன் வாக்குறுதி

’கமல்ஹாசன் எனும் நான்’ :

கமல்ஹாசனை வாழ்த்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியினர், ’கமல்ஹாசன் எனும் நான்’(Kamal Haasan Enum Naan) என்ற ஹேஷ்டேகை டிரண்டிங் செய்து வருகிறார். திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும் தமிழில் பதவியேற்றனர். அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் வரும் திங்கட்கிழமை எம்பியாக பதவியேற்க உள்ளனர்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in