தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதா? : அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும், சீமான் கண்டனம்

தமிழக சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாதக தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 Maria Wilson spoke insults Tamil; Seeman condemns this and demands an apology.
Maria Wilson spoke insults Tamil; Seeman condemns this and demands an apology.google
1 min read

இதுத்க்மிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன் , சீமான் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பேசியது என்ன?

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக்கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தார்

இதற்கு பதிலளித்த பேசிய நிதியமைச்சர்

இதற்கு பதலளித்தி பேசிய நிதியமைச்சர் மரியவில்சன் என்னுடைய அன்புமொழி இதுதான் ,பட்ஜெட் குறித்து பேசுவதை விடுவிட்டு குறைகூறுகிறீர்கள் , என்று மதத்துடன் சம்மந்தப்படுத்தி பேசியிருந்த்து சர்ச்சையை ஏறப்டுத்தியிருந்தது. குறிப்பாக அமைச்சரின் இந்த பேச்சிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்

அமைச்சரின் இந்த பேச்சிற்கு நாதக தலைவர் சீமான் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்

தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரியவில்சன் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களைச் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?

அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்! நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?

கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு?

, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறித்துவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

மாண்பமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என இவ்வாறு கண்டனங்களை தெரிவித்துள்ளார்

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in