CPM P. Shanmugam Statement on Coalition Government in Tamil Nadu
CPM P. Shanmugam Statement on Coalition Government in Tamil Nadu

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் : உறுதியளித்த மா.கம்யூ

CPM P. Shanmugam on Coalition Government : எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Published on

CPM P. Shanmugam on Coalition Government : ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை காவேரி, வைகை, குண்டாறு, வைப்பாறு திட்டம் முக்கியமான திட்டம் . இந்த திட்டத்துக்கு தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சனம் செய்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து யாரும் வரவில்லை என்பதால் ஒவ்வொரு நாளும் பழனிசாமி மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார். பாஜகவுடன் அதிமுக அணி சேர்ந்திருக்கும் வரையிலும் அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்க வருவதற்கு தயாராக இல்லை என்றார்.

இதனையடுத்து 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம் என்றார்.

மேலும் படிக்க : திமுகவின் ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ : அதிமுக புதிய பிரச்சாரம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(DMK CPM Alliance) அவ்வப்போது அரசின் சில நடவடிக்கைகளை விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாகவும், போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அக்கட்சியின் செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in