CPM vs DMK : பாஜக+திமுக+அதிமுக "கொள்கை புடலங்காய்" : CPM அப்படியில்லை, திமுகவிற்கு மார்க்சிஸ்ட் பதிலடி...!

பாஜக, திமுக, அதிமுகவை விமர்சித்து "கொள்கை புடலங்காய்" என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
Marxist party releasing a photograph under the headline "Policy-less Nonsense", criticizing the BJP, DMK, ADMK
Marxist party releasing a photograph under the headline "Policy-less Nonsense", criticizing the BJP, DMK, ADMKgoogle
1 min read

2 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் வெற்றி

திமுக கூட்டணியில் சத்தன்ற தேர்தலை சந்தித்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் வெற்றி பெற்றது.தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காட்சிகள் மாறின.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு

ஆட்சி அமைக்க தவெகவிற்கு போதிய பலம் இல்லாத நிலையில், ஆதரவுக் கரம் நீட்டியது மார்க்சிஸ்ட். அதன் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு தந்து வருகின்றன இடதுசாரி கட்சிகள்

ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது. அதன்மூலம் மத்திய பாஜக கைக்கு அதிகாரம் செல்லக் கூடாது என்ற நோக்கத்தில் தான் தவெகவை ஆதரிப்பதாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் விளக்கம் கொடுத்து இருக்கிறது.

திமுக நாளிதழில் விமர்சன கட்டுரை

இந்தநிலையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளரை விமர்சித்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியானது.

சிபிஎம் நோக்கம் வேறு

‘பெ.சண்முகத்தின் உண்மை முகம் -1 ‘ என்ற தலைப்பிலான அந்த கட்டுரையில, “திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி அமைய ஆதரவு என்ற நோக்கத்துடன் தான் சிபிஎம், தவெகவை ஆதரித்துள்ளது.

பெ. சண்முகத்திற்கு கொள்கை இல்லை

தவெகவின் ஆட்சியை ஆதரிக்கும் சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எந்தவித கொள்கையும் இல்லை” போன்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பெ. சண்முகம் - சி.வி. சண்முகம்

“தவெக ஆட்சியை ஆதரிக்கும் சிபிஎம் சண்முகமும், அதிமுகவின் சி.வி. சண்முகமும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கிறார்கள். இருவருக்குமே கொள்கை, புடலங்காய் என்று ஏதும் இல்லை” எனவும் திமுகவோட கட்டுரையில் கடுமையாக சாடப்பட்டு இருந்தது.

போட்டோ மூலம் சிபிஎம் பதிலடி

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்து இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு இருக்கு.

அதில, “பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய், சிபிஎம்-க்கு எப்போதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு

”திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு” என்று பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த புகைப்படம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in