

The Tamil Nadu government has granted permission to verify the identities of customers on matrimonial sites using Aadhaar to prevent marriage-related frauds.
மோசடிகளைத் தடுக்க அரசு அனுமதி
திருமணம் தொடர்பான மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் அடையாளத்தை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க 'மேட்ரிமோனி' நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசிதழ் அறிவிப்பு வெளியீடு
இது தொடர்பாக சமூகநலத் துறைச் செயலர் எம். மரியம் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிக்கையில், பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்து நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், சுயவிவரங்களில் 'சரிபார்க்கப்பட்ட பயனர்' என்பதைக் குறிக்கும் வசதியைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை : மதுராந்தகத்தில் இன்று விஜய் பொதுக்கூட்டம்...
ஆதார் சரிபார்ப்பு கட்டாயமில்லை
இந்த ஆதார் சரிபார்ப்பு முறை முழுவதும் தன்னார்வ அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆதார் எண்ணைப் பயன்படுத்திச் சரிபார்ப்பை மேற்கொள்ளும் முன்பு சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலை நிறுவனம் கட்டாயம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாற்று ஆவணங்கள் பயன்பாடு
ஆதார் சரிபார்ப்பை மறுக்கும் பயனர்களுக்கு சேவையை மறுக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் அட்டை போன்ற மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை நிறுவனம் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் ஆலோசனையின்படி நடவடிக்கை
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் கலந்தாலோசித்து அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக சமூக நலத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசு அதிரடி:அருண் ஐபிஎஸ்,கோவை காவல் ஆணையர் கண்ணன்,ஏசிபி யாஸ்மின் மீது நடவடிக்கை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
======