மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம் : வைகோ அறிவிப்பு

Mallai Sathya Removed From MDMK Party : மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.
Mallai Sathya Removed From MDMK Party By Vaiko
Mallai Sathya Removed From MDMK Party By Vaiko
1 min read

வைகோவின் வலதுகரம் மல்லை சத்யா :

Mallai Sathya Removed From MDMK Party : திமுகவில் வாரிசு அரசியலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, மறுமலர்ச்சி திமுக என்ற பெயரில் தனிக்கட்சி கண்டவர் வைகோ. மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, வைகோவில் வலதுகரமாக திகழ்ந்தவர் மல்லை சத்யா.

துரை வைகோவிற்கு மல்லை எதிர்ப்பு :

வைகோவின் மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வர தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்தார் மல்லை சத்யா. ஆனால்(Mallai Sathya vs Durai Vaiko), யாரையும் பொருட்படுத்தாமல் தனது மகனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்த வைகோ, அவரை திருச்சி மக்களை எம்பியாக்கியும் அழகு பார்த்தார். இதன் காரணமாக, மல்லை சத்யா - வைகோ - துரை வைகோ இடையேயான பனிப்போர் ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.

மல்லை சத்யா மீது வைகோ குற்றச்சாட்டு :

மல்லை சத்யா துரோகி என்று வைகோ குற்றம்சாட்ட, மல்லை சத்யாவும் பதிலடி கொடுத்தார்(Vaiko on Mallai Sathya). இந்த மோதல் பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. எனவே, மதிமுவிற்கு எதிராக மல்லை சத்யா செயல்படுவதாக கூறி, அவரை தற்காலிகமாக நீக்கம் செய்த வைகோ, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் :

தனது கருத்துக்களை மல்லை சத்யா தொடர்ந்து தெரிவித்து வந்தநிலையில், வைகோ அனுப்பிய நோட்டீசுக்கு, அவர் மறுக்கவும் இல்லை, விளக்கமும் அளிக்கவில்லை. இந்தநிலையில், வைகோ வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ”மல்லை சத்யா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கட்சிக்கு விரோதம் செய்ததன் அடிப்படையில் நடவடிக்கையில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம் :

இதனால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதிகள் விதி 19, பிரிவு- 5, விதி 19, பிரிவு- 12, விதி 35, பிரிவு- 14, விதி 35 பிரிவு 15, விதி 35, பிரிவு 14- படி துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்படுகிறார்”(Mallai Sathya Permanently Removed) இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க : ”32 ஆண்டு உழைப்பு, துரோகமே பரிசு” : வைகோ மீது மல்லை சத்யா தாக்கு

மல்லை சத்யா அடுத்த திட்டம்? :

ஏற்கனவே காஞ்சிபுரத்தில் முப்பெரும் விழாவை நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்த மல்லை சத்யா அடுத்து என்ன செய்யப் போகிறார்? தனிக்கட்சி தொடங்குவாரா? திமுகவில் சேருவார்? அவ்வாறு அவர் சேர முயன்றால் திமுக அதை ஏற்குமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கான பதிலை பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in