12 தொகுதிகள் or ராஜ்யசபா சீட்:திமுகவுடன் மல்லுக்கட்ட போகும் மதிமுக

12 தொகுதிகளில் அல்லது ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மதிமுக, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மல்லுக்கட்டும் எனத் தெரிகிறது.
MDMK, which is determined to win 12 seats or a Rajya Sabha seat, will have to fight the seat-sharing negotiations.
MDMK, which is determined to win 12 seats or a Rajya Sabha seat, will have to fight the seat-sharing negotiations.Google
1 min read

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு படிப்படியாக சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

இந்தமுறை நான்கு முனைப்போட்டி உறுதியாகி விட்ட நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா அல்லது தவெக பக்கம் சாயுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் அதாவது 42 சீட் வரை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை திமுக ஏற்குமா என்பது சந்தேகம் தான். கடந்த தேர்தல் காங்கிரசுக்கு திமுக 25 இடங்களை ஒதுக்கியது.

கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மற்றொரு கட்சியான மதிமுகவுக்கு கடந்த முறை 6 தொகுதிகள் தரப்பட்டன. 2019 மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மற்றும் ராஜ்யசபா சீட் தரப்பட்டது. வைகோ ராஜ்யசபா எம்பியானார்.

12 தொகுதிகள் மதிமுக டிமாண்ட்

அவரது பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், இந்த முறை திமுக கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்க மதிமுக முடிவு செய்து இருக்கிறது.

“ஆட்சி அதி​காரத்​தில் மதி​முக ஒரு​ போதும் பங்கு கேட்​ட​தில்​லை; இனி​யும் கேட்க மாட்​டோம்” என்பதில் மதி​முக நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

பம்பரம் கட்சியினர் வருத்தம்

ஆனால், இந்தமுறை 12 தொகு​தி​களை பெற்றுவிட வேண்டும் என்பதில், மதிமுக​வினர் மல்​லுக்​கட்​ட தயா​ராய் இருக்​கி​றார்​கள். ராஜ்யசபா இடத்தை கமல்​ஹாசனுக்கு கொடுத்​த​தில் பம்​பரம் பார்ட்​டிகளுக்கு தாங்​க​முடி​யாத வருத்​தம் தான்.

மதிமுகவுக்கு 12 தொகுதிகள் தேவை

தேர்​தல் ஆணை​யத்​தின் அங்​கீ​காரத்​தைப் பெறு​வதற்​காக 12 தொகு​தி​கள் மதிமுகவிற்கு அவசியம் தேவைப்படுகிறது. எனவே, கடந்த முறை போல இல்லாமல் எதிர்பார்க்கும் தொகுதிகளை கேட்க மதி​முக தயா​ராகி வரு​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

கூடுதல் தொகுதிகள் - வைகோ பச்சைக்கொடி

இதுகுறித்​துப் பேசிய கட்சி நிர்வாகிகள் "2021 சட்​டமன்​றத் தேர்​தலில் 6ல் போட்​டி​யிட்டு 4ல் வெற்றி பெற்​றோம். வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்​கப்பட்டதாக நிர்வாகிகள் வேதனையில் இருக்கிறார்கள்.

எனவே, கூடுதல் தொகுதிகள் என்பதில் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். இதற்கு வைகோவும் பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது.

12 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு

இதனிடையே தனிப்​பட்ட முறை​யில் துரை வைகோ எடுத்த கணிப்பில், வாசுதேவநல்​லூர், மதுரை தெற்​கு, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, திருச்சி கிழக்​கு, மணப்​பாறை, கும்​பகோணம், பாப​நாசம், மயி​லாடு​துறை, செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 தொகு​தி​களில் மதி​முகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்​ப​தாக தெரிய​வந்​துள்​ளது.

குஸ்திக்கு தயாராகும் கூட்டணி கட்சிகள்

ஒன்று 12 தொகு​தி​கள் அல்லது ஏப்​ரலில் காலி​யாகும் ராஜ்யசபா இடங்​களில் ஒன்​றை வைகோவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே மதிமுகவினரின் நிலைப்பாடு.

எனவே, திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவை அமைத்தவுடன், குஸ்தி இருக்கிறது என்கின்றனர் கூட்டணி கட்சியினர்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in