

திமுக கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக
திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த அறிவிப்பை மதிமுகமதிமுக அறிவித்துள்ளது
எதிர்வரும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவுகளை கட்சி மேற்கொள்ளும்
எதிர்வரும் தேர்தலில் கூட்டணி குறித்த முடிவுகளை கட்சி பின்னர் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார் .மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானமானது நிறைவேற்றப்பட்டுள்ளது
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
இந்த நிலையில் மதிமுக பொதுகுக்ழு கூட்டத்தில் நிறைவேற்றப்ப்ட்ட தீர்மானத்தை மதிமுக அறிவித்துள்ளது
ம்தவாத சக்திகளை வரவிடாமல் இருக்கவும், கொள்கை அடிப்படையில் மட்டுமே திமுக கூட்டணியில் இருந்தோம் , மதிமுக
அந்த வகையில் முதல் தீர்மானம்
“மதிமுக, 2017 டிசம்பர் 3 ஆம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த ஒன்பது வருடங்களாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து வந்தது. தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பதற்கும்,
திமுக கூட்டணியில் இருந்து விலகல்
திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியக் கோட்பாடுகளைத் தகர்ப்பதற்கு விடப்படும் அறைகூவல்களை முறியடிக்கவும் மதிமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொள்கை அடிப்படையில் இடம் பெற்றிந்தாக தெரிவித்துள்ளதெரிவித்துள்ளது மதிமுக
தொடர்ந்து கூட்டத்தில் பேசியதாவது
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் கூட்டணியில் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம் என்று மதிமுக தெரிவித்தது
தேர்தல் முடிவுகளுக்கு பிறகுன அதிருப்தியை வெளிப்படுத்திய மதிமுக
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுகவை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த ரகசியமே.
இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம், சில அக்கறை உள்ள சக்திகளால் பொருளற்றதாக ஆக்கப்பட்டன.
கட்சிக்குள் அழுத்தம்
இந்த சூழலில் , மதிமுக இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்
விலகல் முடிவு, பொதுக்குழுவின் முடிவே
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்ற முடிவு பொதுக்குழு மூலம் முடிவு செய்யப்பட்டதாகவும்
தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது” என மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==========================