”தமிழர்கள் பாதிப்பு, முதல்வர் விஜய் அவசர ஆலோசனை” : 4 அமைச்சர்கள் டெல்லியில் முகாம், நேபாளம் செல்லும் அதிகாரிகள் குழு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை பத்திரமாக மீட்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
meeting was held under Chief Minister Vijay regarding safe rescue of Tamils ​​affected floods in Nepal
meeting was held under Chief Minister Vijay regarding safe rescue of Tamils ​​affected floods in NepalAI generated
1 min read

முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேபாள அரசுடன் இணைந்து செயல்பட முடிவு

நேபாள அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவும், உயிர் பிழைத்தவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு திரும்புவதை உறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

காத்மாண்டு செல்லும் அதிகாரிகள் குழு

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையர் ஆஷிஷ் குமார் மற்றும் ஒரு குழுவினரை காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் அமைச்சர்கள் முகாம்

மத்திய அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கவும், மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் நாடு திரும்புவதை உறுதி செய்யவும், அவர்களுக்குத் தேவையான உடனடி மருத்துவ உதவிகளை வழங்கவும், பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை, வேளாண்மைத் துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த நான்கு அமைச்சர்களை டெல்லிக்கு செல்ல வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

பெருவெள்ளம், அடித்து செல்லப்பட்ட மக்கள்

பனிப்பாறைகள் உடைப்பு காரணமாக நேபாளத்தில் பாயும் போட்டே கோஷி ஆற்றில் நேற்று (ஆகஸ்ட் 26) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தால் கரையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த திடீர் வெள்ளத்தால் நேபாளத்திற்கு சுற்றுலா வந்த பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு சுற்றுலா வாரியம் தெரிவித்திருந்தது.

103 தமிழர்கள் சிக்கி உள்ளனர்

நேபாள வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் சிக்கியுள்ளதாக தற்போதுவரை தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திவீரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in