மேகேதாட்டு அணை விவகாரம் : சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகள் ஆதரவு... : ஒருமனதாக நிறைவேற்றம்!

மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் தீர்மானத்திற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
Mekedatu dam issue: Ministers from all parties in the Legislative Assembly support the resolution.
Mekedatu dam issue: Ministers from all parties in the Legislative Assembly support the resolution. google
1 min read

மேகேதாட்டு விவகாரம் : தமிழக அரசு சார்பாக தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடகா அரசு மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதலவர் விஜய் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது . இத்தீர்மானத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களும் தீரமானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் .

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியதாவது

அணை கட்டுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி

கர்நாடகத்தில் அப்போது எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்

தனித் தீர்மானத்தில், மேகேதாட்டு பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும்.

இந்த தீர்மானத்தை கடிதம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதைவிட, அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒன்றிணைந்து நேரடியாக சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது

மேகேதாட்டு விவகாரத்தில் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, மேக்கேதாட்டில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும் என்றும் , அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

விசிக, பாமக , தேமுதிக மற்றும் இதர கட்சிகள்

முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு , அதாவது மேகேதாட்டு அணைக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

காவிரி படுகையில் எவ்வித நீர் தேக்கத்தையும் கர்நாடக அரசு கட்டக் கூடாது என்று அம்மாநிலத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்." என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது

தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, மமக, கொமதேக, மஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருகிறது

சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறிய தீர்மானம்

இதைத்தொடர்ந்து மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பான தீர்மானம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in