மாதவிடாய் விடுப்பு: அரசே முடிவெடுக்க வேண்டும் ; உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்..

மாதவிடாய் கால விடுமுறை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது
Menstrual leave: Government must make the decision; Madurai Bench of the High Court advises.
Menstrual leave: Government must make the decision; Madurai Bench of the High Court advises.Ai generated
1 min read

மாதவிடாய் விடுப்பு : மதுரை கிளை அறிவுறுத்தல்

மாதவிடாய் கால விடுமுறை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது

வழக்கின் பிண்ணனி

மாதவிடாய் காலங்களில் கால விடுப்பு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கர்நாடகா, கேரளா, பீஹார், ஒடிசாவில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது

நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கொள்கை எதுவும் இல்லை என்று அது குறித்து உரிய பதிலளிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது

முன்தாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது

மனுவில் மனுதாரர் அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு

முழு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று நர்மதா குறிப்பிட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது

மனு விசாரனை , அரசே முடிவெடுக்க அறிவுறுத்தல்

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் , அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியது.

தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் , பெண்களின் பிரச்சனையை கருத்தில் கொள்வது அவசியம் என்றும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாவது

ஆலோசித்து , பதில் மனு அளிக்க உத்தரவு

கூலி வேலைக்கு செல்லும் பெண்களும் பயனடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள். மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in