TN Weather : " வளிமண்டல சுழற்சி, தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை” : கடலோர மாவட்டங்களுக்கு நல்ல செய்தி, வானிலை மையம்..!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
Met Department forecast rain in Tamil Nadu for seven days due to an atmospheric circulation.
Met Department forecast rain in Tamil Nadu for seven days due to an atmospheric circulation.AI generated
1 min read

சூப்பர் எல் நினோ தாக்கம்

சூப்பர் எல் நினோ தாக்கம் காரணமாக, தமிழகத்தில் கோடை காலம் முடிந்தும் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடைக்கு இணையாக பல்வேறு நகரங்களில் 100 சென்டி கிரேடை தாண்டி வெப்பம் பதிவாகிறது.

வானிலை மையம் - வளிமண்டல சுழற்சி

சுமார் 5.8 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 5.8 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் பரவலாக மழை

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

நாளை இடி மின்னலுடன் மழை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், 20ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 21ம் தேதி மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 22ம் தேதி மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

வெப்பநிலையில் மாற்றம் இல்லை

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு,

கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை

சென்னை வானிலை நிலவரம்

சென்னையில் இன்று ‘வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in