

கரையை கடக்கும் தாழ்வு மண்டலம்
தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்க இருக்கிறது. மேற்கு –வடமேற்கு திசையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்று...
நாளை இரவு முதல் 24ம் தேதி அதிகாலைக்குள்வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆனால் புயலாக மாறாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
26ம் தேதி வரை மழை தொடரும்
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 28ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மிதமான மழை
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில், நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 - சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
செப்டம்பர் 24 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
செப்டம்பர் 25, 26 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மாலை/ இரவு நேரங்களில் மழை
தலைநகர் சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேநிலை தான் நாளைய தினமும் நிலவக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்களை பொறுத்தவரை வரும் 26ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் ஆகியவற்றில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே உரிய எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
======================