காற்றழுத்த தாழ்வுப்பாதை, ”மே 24 வரை கனமழை வெளுக்கும்” : சென்னைக்கும் குட் நியூஸ் : வானிலை மையம் கணிப்பு!

தமிழகத்தில் மே 24ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்று, வானிலை மையம் கணித்துள்ளது.
Meteorological Department has predicted that rain will continue in Tamil Nadu for a week until May 24th
Meteorological Department has predicted that rain will continue in Tamil Nadu for a week until May 24thgoogle
2 min read

வெயிலின் தாக்கம் குறைவு

Tamil Nadu Weather Latest Update : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கினாலும், கோடையின் தீவிரம் அந்த அளவு கடுமையாக இல்லை. காரணம் வானிலை மாற்றம், அடிக்கடி பெய்யும் மழைதான்.

தமிழகத்தில் பரவலாக மழை

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 24 வரை மழை தொடரும்

மே 24 வரை நீடிக்கும் இந்த மழைப் பொழிவு குறித்த பார்க்கலாம்.

” சுமார் 1.5 கிமீ உயரத்தில், மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்த்வாடா மற்றும் வட உள் கர்நாடகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

மேலடுக்கு சுழற்சி

இதைப்போல, சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கி மீ.உயரத்தில், தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனைச் ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் தெற்கு லட்சத்தீவு ) பகுதிலிருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மேல் உள்ள (பகுதியை ஒட்டிய மேலடுக்கு சுழற்சி வரை, கேரளா, தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இன்றும், நாளையும் கனமழை

இன்று (மே 18) கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

சென்னைக்கும் மகிழ்ச்சியான செய்தி

சென்னையை பொறுத்தவரையில், இன்றும் நாளையும் (மே 18 & 19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வரை மழை தொடரும்

மே 21 முதல் 24ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகிளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும், என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in