25ம் தேதிவரை மழை எச்சரிக்கை : 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் : சென்னைக்கும் குட்நியூஸ் இருக்கு! வானிலை மையம்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
Meteorological Department has predicted that there is a possibility of heavy rain in 13 districts, including Chennai
Meteorological Department has predicted that there is a possibility of heavy rain in 13 districts, including Chennaigoogle
2 min read

குளிர்விக்கும் கோடை மழை

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் கோடை காலம் என்றாலும், முன்பு போல இந்தமுறை வெயில் அதிகமாக வாட்டி வதைக்கவில்லை. கத்திரி தொடங்கியதில் இருந்தே ஆங்காங்கே கோடை மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

இந்தநிலையில், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மாற்றங்கள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பாதை

சுமார் 1.5 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தர பிரதேசம் முதல் லட்சத்தீவு வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்த்வாடா, உள் கர்நாடகம் மற்றும் கேரளம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கி மீ.உயரத்தில், தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனைச் ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை, கேரளம், தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இன்று - இடி மின்னலுடன் கனமழை

இதன் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடி மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, திருப்பூரின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல்.

மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி...

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மே 20 மற்றும் 22ம் தேதிகள்

நாளை மற்றும் நாளை மறுநாள் மலைப்பிரதேசங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 50 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை கொட்ட வாய்ப்புள்ளது.

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்

சென்னையைப் பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து குளிர்விக்க வாய்ப்புள்ளது.

வெயிலைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாக வாய்ப்புள்ளது.

மே 22 முதல் 25 வரை வானிலை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் வட உள் தமிழகத்தில் மிதமான மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுமக்கள் இடி, மின்னல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in