Weather Update : ”தமிழகத்தில் வெப்ப அலை” : மூன்று தினங்களுக்கு வெயில் கொளுத்தும் : | வானிலை மையம் எச்சரிக்கை...!

தமிழகத்தில் வரும் மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Meteorological Department  warned ntensity heat will increase in Tamil Nadu over the next three days
Meteorological Department warned ntensity heat will increase in Tamil Nadu over the next three daysAI generated
1 min read

வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் கோடை காலம் முடிந்தாலும், வெயில் வாட்டி வதைக்கிறது. அதற்கு ஏற்றார்போல தென்மேற்கு பருவமழையும் போக்கு காட்டி வருகிறது.

சூப்பர் எல் நினோவின் பாதிப்பு காரணமாக உலகமே பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வெப்ப அலையால் 10,000 பேர் இறந்து இருக்காங்க. இவர்களில் பெரும்பாலோர் முதியவர்கள் ஆவர்.

மலை மாவட்டங்களில் லேசான மழை

இந்தநிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ” மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் வறண்ட வானிலை

ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

17ல் மிதமான மழை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 17ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

18, 19ல் மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 20ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .

வெப்பநிலை உயர்ந்து இருக்கும்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்

பொதுமக்களுக்கு அசௌகரியம்

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 16ஆம் தேதி வரை வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்

உள் தமிழக பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வெப்ப அலை வீசக்கூடும்

சென்னையில் வெயில் கொளுத்தும்

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in