முதல்வரின் அலுவலகம் மாற்றம் : எ.வ. வேலு கேள்வி? ஆதவ் பதில் : அதிகாரிகள், ஊழியர்கள் வசதிக்காக மாற்றப்படுவதாக விளக்கம்!

முதல்வரின் தேவைக்காக அலுவலகத்தை மாற்ற நினைக்கவில்லை, அதிகாரிகள், ஊழியர்களின் வசதியை கருத்தில் கொண்டு மாற்றப்படுவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்து இருக்கிறார்.
Minister Aadav Arjuna clarified office is not being relocated to suit the CM needs, but rconvenience of officials
Minister Aadav Arjuna clarified office is not being relocated to suit the CM needs, but rconvenience of officials AI generated
1 min read

டெண்டர் இறுதி செய்யப்படவில்லை

முதலமைச்சரின் புதிய அலுவலகம் தொடர்பான டெண்டரில் விதி மீறல் உள்ளதாக திமுக கொறடா எ.வ.வேலு குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் அலுவலக பணிக்கான டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என பதில் அளித்தார்.

குறைவான இடத்தில் அதிகாரிகள் பணி

100 சதுர அடிக்கும் குறைவாக உள்ள அறையில் தான் முதல்வரின் செயலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதே போல வெளிநாட்டு தூதுவர்கள், வெளிநாட்டு அரசு அதிகாரிகள் முதல்வரை சந்திக்க வரும் போது நெருக்கடியான இடத்தில் தான் அமர்ந்து காத்திருக்கிறார்கள். அவர்களை போன்றவர்களுக்கு முறையான இடவசதி வழங்க முடிவதில்லை என்றார்.

பணியாற்ற இடவசதி தேவை

திமுக உறுப்பினர் எ.வ.வேலு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசினார். ஆனால் உண்மையில் முதல்வர், அதிகாரிகள் உட்பட அனைவரும் சிறப்பாக பணியாற்றும் வகையில் வசதியான இடம் வேண்டும் என்பதால் தான் முதல்வர் அலுவலகத்தை மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.

அறையை மாற்ற முதல்வர் காரணமில்லை

CM அறை மாற்றம் தொடர்பான டெண்டர் இன்னும் முடியவில்லை. முக்கியமாக அதிகாரிகளின் வசதிக்காகவே அலுவலகம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாறாக தன்னுடைய வசதிக்காக முதல்வர் விஜய், அலுவலகத்தை மாற்ற சீரமைக்க நினைக்கவில்லை. முதல்வரின் தனி செயலாளர்கள் கூட சிறிய அளவிலான இடத்தில் தான் பணி புரிகின்றனர்.

மேலும் CM அறை மாற்றம் தற்காலிக ஏற்பாடு தான் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்தார்.

புதிய தலைமைச் செயலகம் - விளக்கம்

இடப்பற்றாக்குறை காரணமாகவே புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நினைத்தார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.

அனைத்து அதிகாரிகளுக்கும் போதிய இடவசதி வேண்டும் என்பதற்காக தான் தற்காலிகமாக தான் முதல்வர் அலுவலகம் மாற்ற முடிவெடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in