

முதல்வர் விஜய் அரசு
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தவெக அரசு, தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்
கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. 5 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ், தவெக அமைச்சரவை இணைய முடிவு செய்துள்ளது. இரண்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.
முதல்வர் விஜய் மரியாதை
இந்தநிலையில், அயோத்திதாசர் பண்டிதர் பிறந்த நாளையொட்டி சென்னையில் கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினர் அவருடன் அமைச்சர்கள் ctr நிர்மல் குமார், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.
அமைச்சரவையும் குடும்பம்தான்
இந்த நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மாண்புமிகு முதலமைச்சர் உடைய விருப்பம் அது அவருடைய கனவு. ஒரு அன்பான வேண்டுகோள்.
குடும்பம் எப்படி இருக்க வேண்டுமோ அதுபோன்று அமைச்சரவையும் இருக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் நினைக்கிறார்.
கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
அதனால் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைவர் தொல் திருமாவளவன், ஐ.யூ.எம்.எல், இடது சாரி கட்சிகளும், வலது சாரி கட்சிகளும் அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து இருக்கிறோம்.
அமைச்சரவையில் பங்கு பெற அழைப்பு
அதற்கு அவர்களும் உடனடியாக தங்களுடைய முடிவுகளை அறிவிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். விரைவில் நல்ல முடிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி
பிரசாரத்தின் போது நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறிய போது திமுகவும் அதிமுகவும் எங்களை கடுமையாக விமர்சித்தன. ஆனால் தவெக வெற்றி பெற்று பிறகு அதிமுக உடைய நிலைமை.
திமுகவுடன் கைகோர்க்க அதிமுக விருப்பம்
ஒரு நல்ல எதிர்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்தனர். பின் வாசல் வழியாக ஆட்சி அமைக்க நினைத்தார்.
முயற்சி முறியடிப்பு
இந்த முயற்சி கைக்கூடவில்லை. மக்களின் தீர்ப்புக்கு மாறாக எடப்பாடி பழனிசாமி செயல்பட முயன்றதால் தான் அதிமுக இரண்டாக உடைந்தது. குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கவும் முயற்சி நடந்தது.
முதலில் காங்கிரஸ் பின்னர் இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆதரவால் தவெக ஆட்சி அமைத்தது” இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேட்டியளித்தார்.
=================