
மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் :
CM MK Stalin Health Condition Update : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த திங்கட்கிழமை காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் :
பின்னர் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பெட் ஸ்கேன் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்(Apollo Hospital) தங்கி இருக்கிறார். அவரை குடும்பத்தினரும், அமைச்சர்களும் சந்தித்து நலம் விசாரித்தனர். மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று காணொலி மூலமும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை :
இன்று காலை முதல்வரை சந்தித்து நலம் விசாரித்த திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன்(Duraimurugan on MK Stalin Health), பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ”முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை(Angiogram Test) செய்யப்பட்டது. பரிசோதனையில் எந்த அடைப்பும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
முதல்வர் நலமுடன் இருக்கிறார் :
ஆஞ்சியோ பரிசோதனைக்கு பிறகு அவர் நலமுடன் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் எப்பொழுது டிஸ்சார்ஜ்(MK Stalin Discharge) செய்யப்படுவார் என்பது குறித்து மருத்துவர்கள் முடிவு செய்து தெரிவிப்பார்கள்” இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
=====