”ஆகஸ்டு முதல் வாரம்” TVK அரசின் முதல் பட்ஜெட் : அமைச்சர் மரிய வில்சன் உறுதி, முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு...!

ஆகஸ்டு முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்து இருக்கிறார்.
Minister Maria Wilson stated that TVK government's first budget will be presented in first week of August
Minister Maria Wilson stated that TVK government's first budget will be presented in first week of AugustAI generated
1 min read

தமிழகத்தில் தவெக அரசு

தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்றது. பின்னர் சட்டசபை கூட்டப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆளுநர் உரை அதன் மீதான விவாதத்திற்காக 2வது முறை சட்டசபை கூட்டம் நடந்து முடிந்தது.

வெள்ளை அறிக்கைகள் தாக்கல்

தமிழக அரசு சார்பில் வெள்ளை அறிக்கை, மின்சாரத்துறை வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அரசின் கடன், நிதிப்பற்றாக்குறை விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.

திமுக அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்வதால், தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம்

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகே முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும். எனவே, பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் தவெக அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

ஆகஸ்டு முதல் வாரத்தில் பட்ஜெட்

நிதி அமைச்சராக இருக்கும் மரிய வில்சன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ புதிய தவெக (TVK) அரசின் 2026-27 நிதியாண்டிற்கான முதலாவது தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

முதல்வர் விஜய் ஆலோசனை

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துறை சார்ந்த உயர் முஅதிகாரிகளுடன் 16 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். தினமும் 6 முதல் 7 மணி நேரம் முதல்வர் விஜய் ஆலோசனைகளை மேற்கொள்கிறார்.

55 நாட்களாக தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா துறைகளையும் அமைச்சர்கள் பொறுப்போடு பார்த்துக் கொண்டு, பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் புதிய முதலீடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக வாக்குறுதிகள் அறிவிப்பு வெளியாகுமா?

தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளியாகி, அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் போன்றவை மக்களால் அதிகம் எதிர்பார்ப்படுவையாக உள்ளன.

====================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in