

மேகேதாட்டு அணை விவகாரம்
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பான புதிய நடுவர் மன்றத்தை அரசு வலியுறுத்துவது ஏன் என்று சட்டசபையில் அமைச்சர் என்.ஆனந்த் விளக்கம் அளித்தார்.
பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தல்
“கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் மேகேதாட்டு பிரச்சனையை எழுப்பிய உடனே முதலமைச்சர் அவர்கள், அரசு தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து அடுத்த நாளே தனது கடிதத்தின் வாயிலாகவும், பிரதமரை நேரடியாக சந்தித்தும் வலியுறுத்தினார்கள்.
பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு
தமிழ்நாடு அரசு சார்பாக புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு முன்பும் மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் தேதி பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் மேகதாது எதிர்த்து தீர்மானத்தை முன்மொழியலாம் எனவும் அதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு கோரலாம் என முடிவெடுத்தார்கள்.
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
19.06.2026 அன்று நடுவர் மன்றம் அமைக்குமாறு வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கடிதம் அன்றைய தினமே பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2018 உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்ட 50% நம்பகத்தன்மை கொண்ட 740 டிஎம்சி தண்ணீர் பங்கிட்டை எந்த ஒரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது.
தமிழகத்தின் உரிமையை தடுக்க முடியாது
கர்நாடகா தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய 177. 25 tmc யில் எந்த மாற்றமும் ஏற்படாது. மேக்தாதுவில் அணை கட்டுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை அரசு உறுதியளிக்கிறது” என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார்.
=============